லிச்சென்ஸ்டீன் எனும் பூலோக சொர்க்கம் - ஆஹா இப்படியும் ஒரு நாடா?

தனிநபர் வருமானத்தில் உலகில் 2 வது இடம்... கடன் இல்லை... வேலை இல்லா திண்டாட்டம் இல்லை! ராணுவமே தேவைப்படாத அளவுக்குப் பேரமைதியும், இயற்கை அழகும் பின்னிப்பிணைந்த பூலோக சொர்க்கம் என்றும் சொல்லக்கூடிய அளவுக்குத் தேசம் அது.
லிச்சென்ஸ்டீன்
லிச்சென்ஸ்டீன்Twitter
Published on

உலக பணக்கார நாடுகளுடன் போட்டிப் போடும் அளவுக்குச் செல்வம் கொழிக்கும் நாடு அது. தனிநபர் ஆண்டு வருமானத்தில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடன் இல்லாத நாடு. அனைவருக்கும் வேலை வாய்ப்பு கொண்ட நாடு. இவை எல்லாவற்றுக்கும் மேலாக ராணுவமே தேவைப்படாத அளவுக்குப் பேரமைதியும், இயற்கை அழகும் பின்னிப்பிணைந்த பூலோக சொர்க்கம் என்றும் சொல்லக்கூடிய அளவுக்குத் தேசம் அது.

சரி... வர்ணனைகள் போதும்... இப்படியான சிறப்பியல்புகளைக் கொண்ட அந்த நாடு எது, எங்கே இருக்கிறது, இன்னும் என்னென்ன சிறப்புகளையெல்லாம் அந்த நாடு கொண்டிருக்கிறது என்பதை விரிவாகப் பார்க்கலாம் வாங்க...

ஆல்ஃப்ஸ் மலைத்தொடர்
ஆல்ஃப்ஸ் மலைத்தொடர்

1. லிச்சென்ஸ்டீன் என அழைக்கப்படும் அந்த நாடு, சுவிட்சர்லாந்துக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு சிறிய ஐரோப்பிய நாடு. 62 சதுர மைல் பரப்பளவில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தை விடக் கிட்டத்தட்ட எட்டு மடங்கு சிறிய நாடான இதன் மக்கள் தொகை, சுமார் 38,000. வாடிகன் சிட்டி, மொனாக்கோ மற்றும் சான் மரினோவிற்கு அடுத்தபடியாக ஐரோப்பாவின் நான்காவது சிறிய நாடு. லிச்சென்ஸ்டீனின் அதிகாரப்பூர்வ மொழி ஜெர்மன்.

2. ஷான் என அழைக்கப்படும் நகரம்தான் லிச்சென்ஸ்டீனின் மிகப்பெரிய நகரமாகும். சுமார் 6,000 பேர் மட்டுமே இங்கு வசிக்கின்றனர். தலைநகர் வடுஸ், ஷானில் இருந்து சுமார் 11 மைல் தொலைவில் உள்ளது. இங்கு சுமார் 5,400 பேர் வசிக்கின்றனர்.

3. ஆல்ஃப்ஸ் மலைத்தொடர் பகுதியில் 100% நிலப்பரப்பைக் கொண்ட உலகின் ஒரே நாடு லிச்சென்ஸ்டீன்.

லிச்சென்ஸ்டீன் மட்டுமல்லாது ஆஸ்திரியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்லோவேனியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவை ஆல்ப்ஸ் மலைத்தொடரை உள்ளடக்கிய ஐரோப்பிய நாடுகள்.

லிச்சென்ஸ்டீன் கடல் மட்டத்திலிருந்து 1,400 அடி உயரத்திலேயே உள்ளது.

லிச்சென்ஸ்டீன்
சுவீடன் : 110 மொழிகளுக்கு தாய்மொழிக் கல்வி வழங்கும் நாடு
லிச்சென்ஸ்டீன்  சுற்றுலாத்தலம்
லிச்சென்ஸ்டீன் சுற்றுலாத்தலம் Twitter

4. ஐரோப்பிய நாடுகளிலேயே மிகக் குறைவான வெளிநாட்டுப் பார்வையாளர்கள் வரும் நாடு இது.



5. லிச்சென்ஸ்டீன் நாட்டின் தனி நபர் வருமானம், அந்த நாட்டின் GDP அடிப்படையில் சொல்வதனால்1,65,028 அமெரிக்க டாலர் ஆகும். இது உலக அளவில் இரண்டாவது இடமாகும்.

பிரெஞ்சு ரிவியராவில் உள்ள பணக்கார நகர-மாநிலமான மொனாக்கோ மட்டுமே இந்த நாட்டின் வருமானத்தைத் தாண்டி உள்ளது.

லிச்சென்ஸ்டீன் நல்ல பணம் கொழிக்கும் தொழில் துறையைக் கொண்டுள்ளது, எலெக்ட்ரானிக்ஸ், உலோக உற்பத்தி, பல் செட் தயாரிப்புகள், ஒளியியல் கருவிகள் மற்றும் மருந்துகள் தயாரிப்பு உள்ளிட்டவை இந்த நாட்டின் பிரதான தொழில்களாக உள்ளன.

6. லிச்சென்ஸ்டீன் நாட்டுக்குக் கடனே கிடையாது. கிட்டத்தட்டப் பூஜ்ஜிய தேசியக் கடனைக் கொண்டுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 0.5% கடன் உள்ளது. மேலும் தேசிய மற்றும் நகராட்சி பட்ஜெட்டுகள், திட்டங்களுக்கான செலவுகள் போக உபரி பணத்தைக் கையில் வைத்திருக்கும் அளவுக்குச் செல்வச் செழிப்பாகத் திகழ்கின்றன.

லிச்சென்ஸ்டீன்
மக்கள் தொகையோ வெறும் 38,000; நிறுவனங்களோ 4000 - ஒரு வாவ் நாடு
லிச்சென்ஸ்டீன்
லிச்சென்ஸ்டீன்Twitter

7. நாட்டின் ஒரே கோடீஸ்வரர் கிறிஸ்டோஃப் ஜெல்லர், அந்த நாட்டின் மொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% மதிப்புடைய செல்வங்களுக்குச் சொந்தக்காரர். பல் செட் தயாரிப்புகளிலேயே அவர் இந்த அளவுக்குச் செல்வத்தை வாரிக் குவித்துள்ளார். கிறிஸ்டோஃப் ஜெல்லரின் சொத்து மதிப்பு 3.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.


8. 1868 ஆண்டிலிருந்தே லிச்சென்ஸ்டீன் நாட்டுக்கு ராணுவம் கிடையாது.ஆனால், சில சமயங்களில் சுவிஸ் ராணுவம் இந்த நாட்டின் எல்லைக்கு அருகிலுள்ள காடுகளில் பயிற்சி பயிற்சிகளை நடத்தும்போது, அதன் வீரர்கள் தற்செயலாக இந்த நாட்டுக்குள் நுழைந்து விடுவதுண்டு.


9. லிச்சென்ஸ்டீனின் தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஒவ்வொரு நாளும் அண்டை நாடுகளிலிருந்து வருபவர்கள்தான். சுமார் 54% பணியாளர்கள் சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் என அந்த நாட்டின் புள்ளி விவரம் ஒன்று சொல்கிறது.

லிச்சென்ஸ்டீன்
லிச்சென்ஸ்டீன்Twitter

10. 2016 ஆம் ஆண்டு லிச்சென்ஸ்டீனில் 406 பேர் மட்டுமே வேலையில்லாமல் இருந்தனர் - அதில் மகப்பேறு விடுப்பிலிருந்தவர்களும் அடங்குவர். நாட்டின் வேலையின்மை விகிதம் 2.1% என்று அந்த நாட்டின் புள்ளியியல் அலுவலக தகவல் தெரிவிக்கிறது.

11. லிச்சென்ஸ்டீனில் விமான நிலையம் இல்லை. லிச்சென்ஸ்டீனின் தலைநகரிலிருந்து சுமார் ஒன்றரை மணிநேர பயணத்தில் சூரிச்சில் மிக அருகில் உள்ள விமான நிலையம் உள்ளது என்பதால், அதையே இந்த நாட்டினர் பயன்படுத்துகின்றனர்.

லிச்சென்ஸ்டீன்
ஆஸ்திரேலியா ஆதிக்குடிகள் அழிக்கப்பட்ட வரலாறு: பழங்குடிகளிடமிருந்து ஐரோப்பா திருடிய நாடு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com