இந்தியா : அனுபவித்து ரசிக்கக்கூடிய 5 அழகான ரயில் பயணங்கள்!

ரயிலில் செல்லும்போது, உங்கள் இருக்கையில் அமர்ந்தபடியே, ஒரு கிளாஸில் ஒரு அருமையான உயர் ரக மதுபானத்தை அருந்தியபடியே, ஆடம்பரமான உணவை உண்டு, தங்கம் போன்று தோற்றமளிக்கும் மணலை முத்தமிடும் சூரியக் கதிர்களின் மயக்கும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டே பயணிக்கலாம்.
Train Travel
Train TravelTwitter

ரயில் பயணங்கள் எப்போதுமே தனித்துவமானதுதான். அதிலும் மலை, மரங்கள், பசுமையான காடு, குளிர்பிரதேசம் என இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் நிலப்பரப்புக்கு ஊடாக ரயிலில் பயணிப்பது என்பது தனி ரசனையானது. நீண்ட நேரப் பேருந்து, கார் பயணங்கள் நிச்சயம் சலிப்பைத் தரக்கூடியவை. அவ்வளவு ஏன்... போர்டிங் பாஸ் பெறுவதற்காக முன்கூட்டியே சென்று மணிக் கணக்கில் காத்திருக்கும் விமான பயணம் கூட சமயங்களில் எரிச்சலடையச் செய்து விடும்.

ஆனால், இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டே செல்லும் ரயில் பயணங்கள் அப்படி இல்லை. நீங்கள் ஒரு ட்ராவல் பிரியராக இருந்தால், அதுவும் வாழ்நாளில் ஒருமுறையாவது பயணித்து அனுபவிக்க வேண்டிய இந்தியாவின் மிக அழகான ரயில் பாதைகள் வழியாகச் செல்லும் பயண அனுபவத்தை, உங்கள் வாழ்க்கையின் நினைவு பொக்கிஷங்களில் சேமித்து வைக்க வேண்டும் என்பது உங்களது விருப்பமாக இருந்தால், அத்தகைய ரயில் பயணங்களின் பட்டியல் இங்கே,

மட்காவ் - மும்பை

கோவா தலைநகர் பனாஜியில் இருந்து 33 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள மட்காவ் நகரம், தெற்கு கோவாவில் அமைந்துள்ளது. இங்கிருந்து மும்பை நோக்கிச் செல்லும் ரயிலில் பயணிக்கும்போது, ரயில் பாதையின் இருபுறமும் தென்படும் இயற்கை அழகில், உங்கள் மனம் அப்படியே சொக்கிப் போய்விடும்.

சஹ்யாத்ரி மலைகளின் அழகு ஒருபுறம் என்றால், மறுபுறம் உங்கள் கூடவே நீண்ட தூரத்திற்குப் பயணிக்கும் அரபிக் கடலின் பிரமாண்டமான அழகும், அமைதியும், அவ்வப்போது ஆர்ப்பரிக்கும் அலைகளும் எனப் பார்க்கக்கூடிய காட்சிகள் அனைத்தும் உங்கள் மனதைக் கொள்ளை கொண்டுவிடும்.

நீங்கள் இன்ஸ்டாகிராமில் தீவிரமாக இயங்குபவராக இருந்தால், மேற்கூறிய அழகுடன் சேர்ந்து கூடவே ஓடி வரும் தென்னை மரங்களுடன் கூடிய நெல் வயல்களுடன் கூடிய அற்புதமான காட்சிகள் அனைத்தையும், உங்கள் கேமரா விழுங்கி, உங்கள் புரஃபைல் பக்கத்தை நிரப்பச் செய்து, பல ஆயிரம் லைக்குகளை அள்ளச் செய்து விடும்.

 Jalpaiguri to Darjeeling
Jalpaiguri to DarjeelingTwitter

ஜல்பைகுரி - டார்ஜ்லிங்

நீங்கள் பாலிவுட் திரைப்படங்களைப் பார்க்கக்கூடியவராக இருந்தால், பர்ஃபி மற்றும் பரினீதா போன்ற திரைப்படங்களில் காண்பிக்கப்பட்ட அழகிய தேயிலைத் தோட்டங்கள் அமைந்திருக்கும் மலைகளின் வழியாகச் செல்லும் ரயில் ( இதைப் பொம்மை ரயில் என்கிறார்கள்) காட்சிகளைக் கட்டாயம் ரசித்திருப்பீர்கள். ரசிப்பதோடு மட்டுமல்லாமல், நாமும் இந்த ரயிலில் பயணம் செய்து பார்க்க வேண்டும் என்றும் உங்கள் மனம் ஆசைப்பட்டிருக்கும்.

உங்களது அந்த ஆசை நிறைவேற வேண்டுமானால், மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஜல்பைகுரி - டார்ஜிலிங் நகரங்களுக்கு இடையே போடப்பட்டுள்ள டார்ஜிலிங் இமாலய ரயில் பாதையில் செல்லும் பொம்மை ரயிலில் பயணிக்க வேண்டும். இந்த ரயில் செல்லும் தண்டவாளம், வெறும் 2 அடி அகல மட்டுமே கொண்டது. கவிஞர்கள், எழுத்தாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் பயண விரும்பிகளைப் பல தசாப்தங்களாக கவர்ந்திழுக்கக்கூடிய இந்த ரயில் பயணம், உங்கள் வாழ்க்கை டயரியில் என்றுமே புரட்டிப் பார்க்கக்கூடிய நினைவுகளாக நிச்சயம் அமையும்.

Train Travel
நமக்குத் தெரிந்த 10 உண்மைகள் - உண்மையில் அவை கட்டுக்கதைகள் தான் தெரியுமா?
Kalka Shimla Railway
Kalka Shimla RailwayTwitter

கால்கா - சிம்லா

நீங்கள் ஒரு ரயில் பயணப் பிரியராகவோ அல்லது ஒரு அரிதான பயண அனுபவத்தைப் பெற விரும்புபவராகவோ இருந்தால், நிச்சயம் கால்கா - சிம்லா இடையேயான அதே பொம்மை வகை ரயில் பயணம், அதை நிச்சயம் பூர்த்தி செய்யும்.

ஹரியானா மாநிலத்தின் பாஞ்ச்குலா மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் கால்கா. இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த நகரம், இமாச்சலப்பிரதேசத்தின் நுழைவாயிலாகக் கருதப்படுகிறது.

இங்கிருந்து இமாச்சலப்பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவுக்குச் செல்லும் இந்த ரயில் பயணத்தை அனுபவிக்க, தேவதாரு மரம் என அழைக்கப்படும் pine மரக்காடுகள், வண்ணமயமான புல்வெளிகள் மற்றும் பாய்ந்தோடும் ஆறுகள் வழியாகச் செல்லும் 'ஹிமாலயன் குயின் டாய் ரயிலில் பயணிக்க வேண்டும். வழியெங்கும் தேவதாரு மரத்தின் மூலிகை மணம் கலந்த காற்று, உங்கள் நாசித் துவாரம் ஊடாக பயணித்து, உங்கள் பயணத்தையே சுவைக்கக்கூடியதாக மாற்றி விடும்.

ஜோத்பூர் -  ஜெய்சால்மேர்
ஜோத்பூர் - ஜெய்சால்மேர் twitter

ஜோத்பூர் - ஜெய்சால்மேர்

நீங்கள் ஒரு அருமையான மற்றும் லக்ஸுரியான பயணத்தை விரும்புபவராக இருந்தால், இந்தியாவின் நீல நகரம் என அழைக்கப்படும் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரிலிருந்து ( இந்த பகுதியில் கரையான் அரிப்பு அதிகம் இருப்பதால் அவற்றைத் தடுக்க நீல வண்ணம் அடிக்கப்படுகிறது) அம்மாநிலத்தின் "தங்க நகரம்" என்ற செல்லப் பெயரால் அழைக்கப்படும் ஜெய்சல்மேர் நகருக்குச் செல்லும் பாலைவனம் வழியான ரயில் பாதையில் பயணிக்க வேண்டும்.

பாலைவன ராணி என அழைக்கப்படும் இந்த பாலைவனத்தின் ஊடாக நீங்கள் இந்த ரயிலில் செல்லும்போது, உங்கள் இருக்கையில் அமர்ந்தபடியே, ஒரு கிளாஸில் ஒரு அருமையான உயர் ரக மதுபானத்தை அருந்தியபடியே, ஆடம்பரமான உணவை உண்டு, தங்கம் போன்று தோற்றமளிக்கும் மணலை முத்தமிடும் சூரியக் கதிர்களின் மயக்கும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டே பயணிக்கலாம்.

Train Travel
இதை பின்பற்றினால் நாய் வளர்ப்பது என்பது எளிதான ஒன்று

பெங்களூரு - கோவா

பெங்களூரு - கோவா வழித்தடத்தில் ரயிலில் பயணம் செய்யும்போது, கவனத்தை அங்கே இங்கே சிதற விட்டு விடக்கூடாது. அந்த அளவுக்கு வெளியே தெரியக்கூடிய காட்சிகள் அதி அற்புதமாக இருக்கும்.

அதிலும் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் Golden Chariot எனப்படும் தங்க ரத சொகுசு ரயிலில் அனைத்து மேம்படுத்தப்பட்ட வசதிகளையும் அனுபவித்தபடியே மேற்கொள்ளும் பயணம், ரயிலின் இரு பக்க ஜன்னல் வழியே உங்களை வேறொரு அற்புதமான உலகிற்கு அழைத்துச் சென்று விடும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Train Travel
டாடா குழுமம் வரலாறு : டாடாவை வம்பிற்கு இழுத்த மொரார்ஜி தேசாய் அரசு| பகுதி 19

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com