நாட்டின் தேசிய இனிப்பு ஜிலேபியா! இந்தியாவிற்கு எப்படி வந்தது தெரியுமா?

பல வரலாறுகளை கொண்டுள்ள ஜிலேபி இந்திய மக்களின் முக்கிய இனிப்பாக இருப்பதுடன் வட ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் பிரபல இனிப்பு உணவாக இருந்து வருகிறது.
The national sweet of the country isJalebi! Do you know how it came to India?
The national sweet of the country isJalebi! Do you know how it came to India?Canva
Published on

நாட்டின் தேசிய விளையாட்டு, தேசிய விலங்கு, தேசிய சின்னம், தேசிய கீதம், தேசிய மலர் எது என்று நமக்கு தெரியும். ஆனால் நமது நாட்டுக்கு என்று தேசிய இனிப்பு உள்ளது பற்றி நம்மில் எத்தனை பேருக்கும் தெரியும்? அதை பற்றி தற்போது விரிவாக தெரிந்துக்கொள்வோம்.

இந்தியாவில் பண்டிகைளுக்கும் திருவிழாக்களுக்கும் எப்போதுமே பஞ்சமே இல்லை, இவற்றில் இனிப்புகளுக்கு முக்கிய இடம் உண்டு. பல வகையான இனிப்பு வகைகள் இருந்தாலும், நமது நாட்டிற்கு என தேசிய இனிப்பு உள்ளது. இது வடமாநில மக்களின் அன்றாட உணவாக இருக்கிறது. ஜிலேபி தான் நமது நாட்டின் தேசிய இனிப்பாகும்

ஜிலேபியின் வரலாறு

ஜிலேபி, இந்தியாவுக்கு முதன்முதாலாக பாரசீகர்கள் மூலம் வந்ததாக கூறப்படுகிறது. இந்தியாவுக்கு வியபாரம் செய்ய வந்த அவர்கள் நமக்கு பரிசாக ஜிலேபியை கொடுத்துவிட்டு சென்றுவிட்டதாகவும் ஒரு தகவல் இருக்கிறது. அரேபிய மொழியின் ’ஜுலேபியா’ என்ற வார்த்தையிலிருந்து தான் ‘ஜிலேபி’ என்ற வார்த்தை உருவானதாக கூறுகின்றனர்.

இலக்கியங்களில் ஜிலேபி

அதே சமயம் இந்தியாவில் ஜிலேபி 1889 ஆம் ஆண்டு ஜபல்பூரில் ஹர்பிரசாத் பட்குல் என்பவர் தான் கண்டுபிடித்தார் என்றும் பண்டைய காலங்களில் ஜிலேபியை 'குண்டலிகா’ என அழைத்துள்ளதாகவும் இந்திய இலக்கியத்தின் ஆரம்பகால குறிப்புகளில் சொல்லப்படுகிறது.

பரிமாணம் அடைந்த ஜிலேபி

உலக வரலாற்றில் உயிரினங்கள் பரிமானம் அடைந்தது போல ஜிலேபியும் மாறியுள்ளது. 500 ஆண்டுகளுக்கு முன்பு மைதாவில் தயாரிக்கப்பட்ட இந்த உணவு ஊர்களுக்கு ஏற்ப உளுந்து, அரிசி, கோதுமை போன்ற மாவுகளில் தயாரிக்க ஆரம்பித்தனர்.

பல வரலாறுகளை கொண்டுள்ள ஜிலேபி இந்திய மக்களின் முக்கிய இனிப்பாக இருப்பதுடன் வட ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் பிரபல இனிப்பு உணவாக இருந்து வருகிறது. ஜிலேபி இந்திய சமையல் கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது என்று கூட சொல்லலாம்.

The national sweet of the country isJalebi! Do you know how it came to India?
சமோசா முதல் கெட்சப் வரை - உலக நாடுகள் தடை செய்த 7 உணவுப் பொருட்கள் - என்ன காரணம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com