சமோசா முதல் கெட்சப் வரை - உலக நாடுகள் தடை செய்த 7 உணவுப் பொருட்கள் - என்ன காரணம்?

அதில் நமக்கு ஃபேவர்ட்டான சில டிஷ்கள் கூட இருக்கின்றன. என்னென்ன உணவுகள்? இவற்றை தடை செய்ய என்ன காரணம்? இந்த பதிவில் பார்க்கலாம்
சமோசா முதல் கெட்சப் வரை - உலக நாடுகள் தடை செய்த 7 உணவு வகைகள் - என்ன காரணம்?
சமோசா முதல் கெட்சப் வரை - உலக நாடுகள் தடை செய்த 7 உணவு வகைகள் - என்ன காரணம்?canva
Published on

பல்வேறு மனிதர்களுடனும், கலாச்சாரங்களுடனும் நம்மை எளிதாக இணைப்பது உணவுகள். இந்திய உணவுகள் உலகளவிலும், உலகின் பல்வேறு நாடுகளின் க்யுசீன்கள் இந்தியாவிலும் பிரபலம்.

இவற்றில் சிலவற்றை நாம் அன்றாட உணவு தயாரிப்பிலும் கூட சேர்த்து கொண்டுவிட்டோம்.

என்ன தான் உணவுகளும் உணவுப்பிரியர்களும் நம்மைச் சுற்றி ஏராளமானோர் இருந்தும், சில உணவுகளை உலக நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன.

அதில் நமக்கு ஃபேவரைட்டான சில டிஷஸ் கூட இருக்கின்றன. என்னென்ன உணவுகள்? இவற்றை தடை செய்ய என்ன காரணம்? இந்த பதிவில் பார்க்கலாம்

கசகசா விதைகள்

இந்திய உணவுகளில், மசாலாக்களில் முக்கிய இடம் பிடித்தது இந்த கசகசா. உணவின் சுவையை கூட்டுவதுடன் இவற்றில் மருத்துவ குணங்களும் உள்ளன.

ஆனால் இவை சில நாடுகளில் தடை செய்யப்பட்டவை. இந்தியாவில் இருந்து நம்மால் இதனை மற்ற நாடுகளுக்கு எடுத்துச் செல்ல இயலாது.

பாப்பி என்று அழைக்கப்படும் இதன் செடியில் விதைகளை பை ஒன்று தாங்கியிருக்கும். இந்த பைகள் காய்ந்த பிறகு எடுப்பது தான் கசகசா விதைகள். ஆனால் அந்த பைகள் பச்சையாக இருக்கும்போது, விதைப்பையை கிழித்து வடிகிற பாலை சிலர் எடுப்பார்கள்.

இது உலகின் பிரபலமான போதைப் பொருட்களில் ஒன்றான ஓபியம்.

தைவான், மத்திய கிழக்கு நாடுகள், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் கசகசா தடை செய்யப்பட்டுள்ளது

கபாப்

மத்திய கிழக்கு நாடுகளில் பிரபலமாக உண்ணப்படும் மாமிச உணவு வகைகளில் ஒன்று இந்த கபாப். பல விதமான மசாலாக்கள் மற்றும் மூலிகைகளை வைத்து தயாரிக்கப்படும் இந்த கபாபினை வெனிஸ் நாடு 2017ஆம் ஆண்டு தடை செய்தது.

அவர்களது நாட்டின் பாரம்பரியம் மற்றும் நல்லொழுக்கத்தை பாதுகாக்கும் வண்ணம் இந்த முடிவு செய்யப்பட்டதாக கூறுகின்றனர்.

பப்புள் கம்

பல விதமான கலர்களிலும், ஃபிளேவர்களிலும் கிடைக்கிறது சூயிங் கம். இதனை வாய் துர்நாற்றத்தினை போக்க நாம் மெல்லுவோம். சிலர் வாடிக்கையாகவே சூயிங் கம் சாப்பிடுவார்கள்.

சூயிங் கம் சாப்பிடுவதால் நன்மைகள் பலவும் உள்ளன.

ஆனால் இதனை 1992 ஆம் ஆண்டு சிங்கப்பூர் அரசு தடை செய்தது. சூயிங் கம்மை மென்று விட்டு கண்ட இடத்திலும் அதனை துப்புவதால், நாடு அசுத்தமாகிறது என்று இந்த தடை போடப்பட்டது.

மற்றொருபுறம் அமெரிக்காவிலோ, ஒரு தெரு முழுக்க மென்ற பப்புள் கம்களை ஒட்டும் வினோத வழக்கம் உள்ளது. இது பிரபலமான சுற்றுலா தலமும் கூட!

ஆனால் அங்கு மருத்துவ காரணங்களுக்காக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் தெரபாட்டிக் சூயிங் கம்கள் அனுமதிக்கப்படுகின்றன.

சமோசா முதல் கெட்சப் வரை - உலக நாடுகள் தடை செய்த 7 உணவு வகைகள் - என்ன காரணம்?
அமெரிக்கா: வாயில் போட்டு மென்ற Bubble Gumஐ சுவற்றில் ஒட்டும் விநோத வழக்கம் - ஏன்?

கெட்சப்

பொதுவாக தக்காளி சாஸ் என்று அறியப்படும் கெட்சப் பிரான்ஸ் நாட்டில் தடை செய்யப்பட்டிருக்கிறது.

தக்காளியை பிரதானமாக வைத்து தயாரிக்கப்படும் இந்த சாஸ் புளிப்பு, இனிப்பு காரம் என பல சுவைகளில் கிடைக்கிறது. இதனை ஒரு காலத்தில் மருத்துவ காரணங்களுக்காக பயன்படுத்தியதாக சான்றுகள் உள்ளன.

ஆனால், பிரான்ஸ் நாட்டில் இளைஞர்களுக்கு மத்தியில் இந்த சாஸ் பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்ததால் அந்த நாடு தடை போட்டுள்ளது.

நெய்

பாலில் இருந்து தயாரிக்கப்படும் இது நம் ஆரோக்கியத்தில் நல்ல கொழுப்பை அதிகரிக்கவல்லது. ஆனால் அதையும் ஒரு அளவுக்கு சாப்பிட்டால் மட்டுமே. ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடலாம்.

இந்திய உணவுவகைகளில் குறிப்பாக வட இந்திய உணவு வகைகளில் நெய் மற்றும் வெண்ணை இல்லாத உணவுகளை பார்க்கவே இயலாது.

இப்படியிருக்க அமெரிக்காவில் ஒபிசிட்டி மற்றும் அதிக ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல் குறைபாடுகளை முன்னிருத்தி நெய்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சாவன்பிராஷ்

இதனை பயன்படுத்த கனடாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பழங்கள், மூலிகைகள், மசாலாக்கள் சேர்த்து தயாரிக்கப்படும் ஜாம் போன்ற இந்த பதார்த்ததை மருத்துவ குண நலன்கள் இருப்பதால் பலர் தினமும் ஒரு ஸ்பூன் சாப்பீடுவார்கள். இந்தியாவில் பலரும் இது சாப்பிட்டு பார்த்திருப்போம்.

ஆனால் இதில் ஈயம் மற்றும் பாதரச தாதுக்கள் அதிகம் இருப்பதால் இதனை கனடா அரசு தடை செய்துள்ளது

சமோசா

டீ, காபி, மில்க்‌ஷேக் என எந்த பானத்தோடும் துணை போகும் சமோசா. இதனை விரும்பாதவர் இல்லை. உருளைக்கிழங்கு, மேகி, சிக்கன், மட்டன் என வித விதமான சுவைகளில் கிடைக்கும் இந்த ஸ்நாக் வகை.

இதன் முக்கோண வடிவம் கிறிஸ்தவ சின்னமான அல் ஷபாப் குழுவினை பிரதிபலிப்பதாக இருப்பதால் அதனை தடை செய்துள்ளதாக டைம்ஸ் நவ் தளம் கூறுகிறது.

சமோசா முதல் கெட்சப் வரை - உலக நாடுகள் தடை செய்த 7 உணவு வகைகள் - என்ன காரணம்?
பாகுபலி சமோசா: இந்த ஒரு சமோசாவை சாப்பிட்டால் 51,000 ரூபாய் - ஒரு அடடே போட்டி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com