நமது உடல்நலத்தை காக்க, சுகாதாரமாக இருப்பது மிக அவசியமாகிறது.
அதிலும் பர்சனல் ஹைஜீனை மெயின்டெயின் செய்வது மிகவும் அவசியம். பர்சனல் ஹைஜீன் என்று எடுத்துக்கொண்டால், இரண்டு முறை பிரஷ் செய்வதில் தொடங்கி, நமது கழிவறை பயன்படுத்தும் பழக்கம் வரை சொல்லலாம்.
அந்த காலத்தில் இந்தியன் ஸ்டைல் கழிவறை இருக்கைகள் இருந்தன. இவற்றால் பெரும் பாதிப்பு இருந்ததில்லை. ஆனால் இன்று வீடுகள் தொடங்கி, பொது இடங்கள் வரை இருப்பது வெஸ்டர்ன் டாய்லெட்கள் தான்.
இந்த இருக்கைகளை இருவர் மட்டுமே பயன்படுத்த இயலும். ஆனால் வீடுகளில், பொது இடங்களில் இருவருக்கு மேல் இந்த கழிவறை இருக்கைகளை பயன்படுத்துகிறோம்.
சரி, இந்த வெஸ்டர்ன் டாய்லெட்டின் சீட்டுகளை நீங்கள் எப்போதாவது கவனித்ததுண்டா?
நம் வீடுகளில் இருக்கும் டாய்லெட் சீட்டுகள் பெரும்பாலும் ஒவல் வடிவத்தில் இருக்கும்,
ஆனால் பொது கழிப்பறைகளில் இருக்கும் வெஸ்டர்ன் டாய்லெட்டின் இருக்கைகள் U வடிவத்தில் இருக்கும். இது ஏன் தெரியுமா?
சுகாதாரத்தின் காரணமாகவே இந்த டாய்லெட்கள் U ஷேப்பில் இருக்கின்றன. இந்த திறந்த-முன் கழிப்பறை இருக்கையில் அமரும்போது பிட்டத்தை எங்கு வைக்கிறீர்கள் என்பதை இது குறிக்கும்
மேலும் American Standard National Plumbing Codeந் படி, இதுவே நிலையான (Standard) தரம் எனவும் கூறப்படுகிறது. 1955ல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வகை டாய்லெட் சீட், 1973 முதல் அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தப்பட்டது.
ஓவல் வடிவ இருக்கையை விட, U வடிவ இருக்கையில் கிருமிகள் அண்டுவது குறைவாக உள்ளது என்று தெரிவிக்கின்றனர்.
இதில் மற்றுமொரு முக்கியமான அம்சம், இந்த வகை வடிவமைப்பு பெண்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டதாகும். பெண்கள் தங்களது அந்தரங்க பகுதிகளை சுத்தம் செய்துகொள்ள எளிமையாக இருக்க உருவாக்கப்பட்டது.
தவிர, இந்த இருக்கையை பயன்படுத்தும் எந்த நபரின் பிறப்புறுப்பும் சீட்டுடன் தொடர்புகொள்ளாது. இதனால் பால்வினை நோய்கள் பரவுவதும் தடுக்கப்படுகிறது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust