இந்தியாவின் சிறப்புகளில் ஒன்று அதன் இயற்கை வளங்கள். காடுகள் இந்தியாவின் இயற்கை வளங்களை காப்பதில் பெரும்பங்காற்றூகின்றன.
விலங்குகளுக்கு வாழ்விடங்கள் மற்றும் மனிதர்களுக்கு வாழ்வாதாரங்களை வழங்குவதைத் தவிர, காடுகள் நீர்நிலைப் பாதுகாப்பையும் வழங்குகின்றன, மண் அரிப்பைத் தடுக்கின்றன மற்றும் காலநிலை மாற்றத்தைத் தணிக்கின்றன.
இந்தியாவிலுள்ள சில மாநிலங்களில் மற்ற மாநிலங்களை விட அதிகமான பரப்பளவில் காடுகள் அமைந்துள்ளன. அவற்றைக் குறித்து இங்கு காணலாம்
மத்திய பிரதேச மாநிலத்தில் சுமார் 30.17 சதவிகிதம் காட்டு பகுதி தான். இந்தியளவில் இது 12.4 சதவிகிதமாக இருக்கிறது. இந்தியாவில் மத்திய பிரதேசம் தான் அதிக பரப்பளவு காடுகளை கொண்ட மாநிலம். இந்த காடுகள் கன்ஹா தேசிய பூங்கா மற்றும் பாந்தவ்கர் தேசிய பூங்கா ஆகியவற்றின் பகுதிகள்
மத்திய பிரதேசத்துக்கு அடுத்தபடியாக அருணாச்சல பிரதேச மாநிலம் இருக்கிறது. இம்மநிலத்தில் 80 சதவிகிதம் காட்டுப்பகுதி தான். அடர்ந்த காடு பகுதி வனவிலங்கு சரணாலயம் மற்றும் நம்தாபா தேசிய பூங்காவின் ஒரு பகுதியாகும்.
சத்தீஸ்கரில் 41.13 சதவிகிதம் காட்டுப் பகுதியாக உள்ளது. இது இந்தியாவின் மூன்றாவது பெரிய காடுகளால் மூடப்பட்ட மாநிலமாக உள்ளது. கங்கேர்காட்டி தேசியப் பூங்கா மற்றும் இந்திராவதி தேசியப் பூங்கா ஆகியவை இந்தப் பரந்த வனப்பகுதியின் பெரும்பகுதியை உள்ளடக்கி, புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாகும்.
நான்காவது அதிக காடு பாகுதிகளை கொண்ட மாநிலமாக ஒடிசா இருக்கிறது. இவை பிடர்கனிகா தேசிய பூங்கா மற்றும் சிம்லிபால் தேசிய பூங்காக்களின் பகுதியாகும். ஒடிசா மாநிலம் தங்கள் காட்டுப் பகுதிகளை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் இருக்கிறது
ஐந்தாவது அதிக காட்டு பகுதிகளை கொண்ட மாநிலம் மகாராஷ்டிரா. இங்குள்ள பெஞ்ச் புலிகள் காப்பகம் மற்றும் தபோசா அந்தாரி புலிகள் காப்பகங்களில் புலிகள் மற்றும் பிற வனவிலங்குககளை காணலாம்.
கர்நாடகாவில் 20 சதவிகித பகுதி காடு தான். இங்கும், இந்தியாவின் தேசிய விலங்கான புலிகள் மற்றும் இதர விலங்கினங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இங்கு நாகர்ஹோலே தேசிய பூங்கா மற்றும் பந்திப்பூர் தேசிய பூங்கா அமைந்துள்ளன.
அதிக சதுப்புநில காடுகள் உள்ள மாநிலங்கள் தரவரிசையில், இந்தியாவில் மூன்றவது இடத்தைக் கொண்டுள்ளது கர்நாடகா
இந்தியாவின் மிகப்பெரிய காடுகளைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது, ஆந்திரப் பிரதேசம். கிழக்குத் தொடர்ச்சி மலை காடுகளும் இந்த மாநிலத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust