Uber: டாக்ஸி ஓட்டி மாதம் ரூ.40,000 சம்பாதிக்கும் பெண் பொறியாளர் - குவியும் பாராட்டு

என்னதான் பெண்கள் தற்போது இரு சக்கர வாகனம் முதல் ஏரோபிளேன் வரை ஓட்டுகிறார்கள் என்றாலும், பெண் ஓட்டுநர்களை பார்ப்பது ஆர்வத்தை தூண்டும் ஒரு விஷயமாகவே நமக்கு இருந்து வருகிறது
Uber: டாக்ஸி ஓட்டி மாதம் ரூ.40,000 சம்பாதிக்கும் பெண் பொறியாளர் -  குவியும் பாராட்டு
Uber: டாக்ஸி ஓட்டி மாதம் ரூ.40,000 சம்பாதிக்கும் பெண் பொறியாளர் - குவியும் பாராட்டுTwitter
Published on

கொல்கத்தாவில் வாடகை கார் ஓட்டிக்கொண்டிருக்கும் பெண் டிரைவர் தற்போது பிரபலமாகிவருகிறார். இவர் கார் ஓட்டுநராக ஆன கதை பலரையும் கவர்ந்துள்ளது

அவரது காரில் பயணித்த நபர் ஒருவர் சமூக வலைதளத்தில் அப்பெண்ணுடனான தனது அனுபவத்தை பகிர்ந்திருந்தார்

பரம் கல்யாண் சிங் என்பவர் ஊபர் வாடகை காரை புக் செய்திருந்தார்

அவரை பிக் அப் செய்ய எங்கு வரவேண்டும் என கேட்க அழைப்பு வந்தபோது தான் அவருக்கு சர்பிரைஸ் காத்திருந்தது. அந்தப் பக்கம் பேசியது ஒரு பெண். பேசிய பெண்ணின் பெயர் தீப்தா கோஷ்.

காரும் வந்தது, பரம் சிங்கும் பயணத்திற்கு தயாரானார். என்னதான் பெண்கள் தற்போது இரு சக்கர வாகனம் முதல் ஏரோபிளேன் வரை ஓட்டுகிறார்கள் என்றாலும், பெண் ஓட்டுநர்களை பார்ப்பது ஆர்வத்தை தூண்டும் ஒரு விஷயமாகவே நமக்கு இருந்து வருகிறது.

அதே ஆர்வத்துடம் பரம் சிங்கும் அப்பெண்ணிடம் பேசத் தொடங்கியுள்ளார்.

Uber: டாக்ஸி ஓட்டி மாதம் ரூ.40,000 சம்பாதிக்கும் பெண் பொறியாளர் -  குவியும் பாராட்டு
புடவை அணிந்துகொண்டு 42 கி.மீ மாரத்தான் ஓடிய 41 வயது இந்திய பெண் - குவியும் பாராட்டு

”நீங்கள் பேசிய விதத்தை வைத்து படித்தவர் என்று தெரிகிறது. என்ன படித்திருக்கிறீர்கள்?” எனக் கேட்டுள்ளார் பரம்.

பதிலளித்த தீப்தா, தான் ஒரு பி டெக் எலக்ட்ரிக்கல் பட்டதாரி எனவும், கடந்த 6 வருடங்களாக பல நிறுவனங்களில் பணியாற்றியதாகவும் கூறினார்.

2020ல் அவரது தந்தை மறைந்தார். அதன் பின் அவருக்கு வந்த வேலை வாய்ப்புகள் எல்லாம் வெளியூருக்கு அவர் மாறி செல்லும்படியாக இருந்துள்ளது. ஆனால் தன் தாயையும் தங்கையையும் தனியே விட முடியவில்லை.

Uber: டாக்ஸி ஓட்டி மாதம் ரூ.40,000 சம்பாதிக்கும் பெண் பொறியாளர் -  குவியும் பாராட்டு
பெண் குரலில் பாடும் நபர் - கேலி, கிண்டல்களை தாண்டி சாதித்தது எப்படி? | வீடியோ

இதனால் ஒரு கமர்ஷியல் ஓட்டுநர் உரிமம் பெற்று ஒரு ஆல்ட்டோ காரையும் சொந்தமாக வாங்கினார். ஊபர் நிறுவனத்துடன் தன்னை இணைத்துக்கொண்டு கார் ஓட்டுநராக பணியாற்றிவரும் தீப்தா தற்போது மாதம் 40,000 ரூபாய் வரை சம்பாதிப்பதாக கூறினார்.

வாரம் 6 நாட்கள், ஒரு நாளைக்கு 6 முதல் 7 மணி நேரம் வரை வாகனம் ஓட்டுகிறார் தீப்தா.

இவரது கதையை பரம் சிங் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரவே, இணையம் அவரை பாராட்டி வருகிறது

Uber: டாக்ஸி ஓட்டி மாதம் ரூ.40,000 சம்பாதிக்கும் பெண் பொறியாளர் -  குவியும் பாராட்டு
Ramesh Babu: 400 சொகுசு கார்கள் வைத்திருக்கும் சலூன் கடைக்காரர் - பெங்களூரு பார்பரின் கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com