Ramesh Babu: 400 சொகுசு கார்கள் வைத்திருக்கும் சலூன் கடைக்காரர் - பெங்களூரு பார்பரின் கதை!

இவருக்கு 7 வயது இருக்கும் போதே தந்தை இறந்துவிட்டார். சிறுவயதிலிருந்தே குடும்ப பாரத்தை சுமந்தார் ரமேஷ் பாபு. பல தொழில்களை செய்துவந்த அவர்,செய்தி தாள் விநியோகம் செய்யும் வேலையைக் கூடச் செய்திருக்கிறார்.
Ramesh Babu: 400 சொகுசு கார்கள் வைத்திருக்கும் சலூன் கடைக்காரர் - பெங்களூரு பார்பரின் கதை!
Ramesh Babu: 400 சொகுசு கார்கள் வைத்திருக்கும் சலூன் கடைக்காரர் - பெங்களூரு பார்பரின் கதை!Twitter
Published on

பெங்களூருவை சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளர் ரமேஷ் பாபு. இவரை "பில்லியனர் பார்பர்" எனக் குறிப்பிடுகின்றனர்.

இந்தியாவிலேயே மிகப் பெரிய சொகுசு கார் கலெக்ஷன் இவருடையது எனக் கருதலாம். ஏனென்றால் ரமேஷ் பாபு மெர்சிடஸ் பென்ஸ், ரேஞ்ச்ச் ரோவர், ரோல்ஸ் ராய்ஸ் முதலிய 400 சொகுசு கார்களை வைத்திருக்கிறார்.

வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் நியூஸ் பேப்பர் விநியோகம் செய்துகொண்டிருந்த இவர் இவ்வளவு பெரிய பணக்காரராக வளர்ந்த கதையை தெரிந்துகொள்ளலாம்.

ரமேஷ் பாபுவின் தந்தையும் ஒரு முடிதிருத்தும் தொழிலாளி தான். இவருக்கு 7 வயது இருக்கும் போதே தந்தை இறந்துவிட்டார்.

தனியாக பிள்ளைகளை வளர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் ரமேஷ் பாபுவின் அம்மா. அப்பா வைத்திருந்த கடையை உறவினருக்கு கொடுத்துவிட்டனர்.

சிறுவயதிலிருந்தே குடும்ப பாரத்தை சுமந்தார் ரமேஷ் பாபு. பல தொழில்களை செய்துவந்த அவர்,செய்தி தாள் விநியோகம் செய்யும் வேலையைக் கூடச் செய்திருக்கிறார்.

வீட்டில் சரியான உணவுக்கு கூட காசில்லாத நிலையில் வளர்ந்த ரமேஷ் பாபு, 1990களில் தனியாக தனது சலூன் கடையைத் தொடங்கியிருக்கிறார்.

சலூனில் பணம் சம்பாதிக்கத் தொடங்கிய ரமேஷ் அந்த பணத்தை செலவு செய்து வாழ்ந்து கழிக்கவில்லை. மாறாக தனது வருமானத்தில் சேமிப்புகளை மேற்கொண்டு, ஒரு ஆம்னி வாகனத்தை வாங்கி வாடகைக்கு விடவும் சுயமாக ஓட்டி டிரைவர் வேலை செய்யவும் தொடங்கியிருக்கிறார்.

Ramesh Babu: 400 சொகுசு கார்கள் வைத்திருக்கும் சலூன் கடைக்காரர் - பெங்களூரு பார்பரின் கதை!
Pakistan : பணக்காரர்களாக வாழும் இந்துக்கள் - சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

ரமேஷ் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் என அவரது நிறுவனத்துக்கு பெயரிட்டுள்ளார். அதன் பின்னர் ரமேஷ் ஒரு மெர்சிடஸ் பென்ஸ் காரை வாங்கியிருக்கிறார்.

அந்த காரை வாடகைக்கு விட்டு சொகுசு கார்களை வாடகைக்கு விடும் வேலையைச் செய்திருக்கிறார். பெங்களூரில் முதன்முறையாக இந்த தொழிலைத் தொடங்கியவர் ரமேஷ் பாபு தான்.

Ramesh Babu: 400 சொகுசு கார்கள் வைத்திருக்கும் சலூன் கடைக்காரர் - பெங்களூரு பார்பரின் கதை!
பள்ளியில் பலமுறை ஃபெயிலான பெண்; இப்போது பல கோடிகளுக்கு அதிபதி - யார் இந்த அஞ்சலி சாவுத்?

அவரது தொழில் வெற்றிகரமாக நடக்க, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (3 கோடி), பி.எம்.டபிள்யூ, ஜாக்குவார், பென்ட்லி உள்ளிட்ட பல சொகுசு கார்களை வாங்கினார். 2017ம் ஆண்டு அவர் 2.6 கோடி மதிப்புடைய மேபீச் காரை வாங்கும் போது செய்திதாள்களில் தலைப்பு செய்தியாக வந்தார்.

இவரது கார்களை ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், அமீர் கான், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்கள் பயன்படுத்தியிருக்கிறார்களாம்.

Ramesh Babu: 400 சொகுசு கார்கள் வைத்திருக்கும் சலூன் கடைக்காரர் - பெங்களூரு பார்பரின் கதை!
அம்பானி to சாவித்ரி: படிப்பை பாதியில் நிறுத்தினாலும் உலகப்பணக்காரர்களான இந்தியர்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com