நெய் விற்பனையில் கோடிகளில் சம்பாதிக்கும் ரமேஷ்பாய் - 1 கிலோ 6 லட்சமா! அப்படி என்ன ஸ்பெஷல்?

ஒரு கிலோ நெய் தயாரிக்க 31 லிட்டர் பால் தேவைப்படுகிறது. நெய் உற்பத்தியில் இருந்து பேக்கேஜிங் மற்றும் வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்வது வரை இந்த வணிகம் 140 குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது.
This Gujarat Man Produces One-Of-A-Kind Ghee Priced At Rs 2 To 6 Lakh Per Kg
This Gujarat Man Produces One-Of-A-Kind Ghee Priced At Rs 2 To 6 Lakh Per KgTwitter

நெய் விற்பனை செய்து வருஷத்துக்கு 2 கோடி வரை வருமானம் ஈட்டி வருகிறார் குஜராத்தைச் சேர்ந்த ரமேஷ்பாய் ருபரேலியா. பால், வெண்ணெய், நெய் போன்றவை பலரின் விருப்பமான உணவுப்பொருட்களாக உள்ளன.

கடையில் கிடைப்பது எல்லாம் அவ்வளவு தூய்மையாக இல்லை என கலப்படமற்ற நெய்யை வாங்க வேண்டும் என்று எண்ணுக்கின்றனர். வீட்டிலேயே தயாரிக்கப்படும் நெய்க்கு அவ்வளவு டிமாண்ட் உள்ளது.

நெய் விற்பனை செய்தால் மாதம் 50,000 வரை வருவாய் ஈட்ட முடியுமா? ஆனால் குஜராத்தைச் சேர்ந்த ரமேஷ்பாய் ருபரேலியா என்பவர் நெய் வியாபாரம் செய்தே மாதம் ரூ.40 லட்சம் வரை சம்பாதித்து வருகிறார்.

ரமேஷ்பாய் ருபரேலியா என்பவர் 200க்கும் மேற்பட்ட பசுக்களை வைத்துள்ளார். பசுவின் பாலை விற்பதற்குப் பதிலாக, நெய், மோர் என விற்பனை செய்கிறார். ரமேஷ்பாய் ஒரு கிலோ நெய் ரூ.3,500 முதல் ரூ.2 லட்சம் வரை விற்பனை செய்கிறார்.

பழங்கால நூல்களைப் பின்பற்றி, பல்வேறு மூலிகைகள் மற்றும் மருத்துவ தாவரங்கள் இந்த நெய்யில் இணைக்கப்பட்டுள்ளன, அதன் மதிப்பு காரணமாக 1 கிலோ சில சமயங்களில் ரூ. 6 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ நெய் தயாரிக்க 31 லிட்டர் பால் தேவைப்படுகிறது. நெய் உற்பத்தியில் இருந்து பேக்கேஜிங் மற்றும் வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்வது வரை இந்த வணிகம் 140 குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. ரமேஷ்பாய் கடந்த 17 வருடங்களாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

This Gujarat Man Produces One-Of-A-Kind Ghee Priced At Rs 2 To 6 Lakh Per Kg
4000 ஆண்டுகளாக வெயிலிலும் உருகாத நெய் லிங்கம் - இந்தியாவில் எங்கே இருக்கிறது?

ரமேஷ்பாய் இந்த நெய்யை உருவாக்க வேதங்ககளில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை கடைபிடிக்கிறார். இதனாலேயே இங்கு தயாரிக்கப்படும் நெய் மிகவும் விலை உயர்ந்தது, மக்கள் இந்த நெய்யை வாங்குகின்றனர்.

ரமேஷ்பாயின் தயாரிப்புகளுக்கு அமெரிக்கா, கனடா, சவுதி அரேபியா போன்ற பல நாடுகளில் அதிக தேவை உள்ளது. இவர் தனது பொருட்களை விற்பனை செய்து மாத வருமானம் ரூ.40 லட்சம் வரை சம்பாதிக்கிறார். வருடத்திற்கு ரூ. 3 முதல் 4 கோடி வரை வருவாய் ஈட்டுகிறார்.

இந்த நெய் தலைவலி, தோல் பிரச்சினைகள் மற்றும் இருமல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. அதுமட்டுமில்லாமல் இது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், கண்களுக்குக் கீழே உள்ள கருவளையம் மற்றும் முகப்பரு ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது.

This Gujarat Man Produces One-Of-A-Kind Ghee Priced At Rs 2 To 6 Lakh Per Kg
சமோசா முதல் நெய் வரை: இந்தியாவின் பிரபலமான 5 உணவுகளுக்கு மற்ற நாடுகளில் தடை - ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com