4000 ஆண்டுகளாக வெயிலிலும் உருகாத நெய் லிங்கம் - இந்தியாவில் எங்கே இருக்கிறது?

இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் போதும் தீப ஆராதனை செய்யும் போது உருகுவதில்லையாம், இந்த கோயிலில் கொடுக்கப்படும் பிரசாதத்தை உண்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது இங்கு உள்ள மக்களின் நம்பிக்கை
Vadakkunnathan Temple: Everything You Need To Know About This Popular Temple
Vadakkunnathan Temple: Everything You Need To Know About This Popular TempleTwitter
Published on

இந்தியாவில் இமயமலை முதல் குமரி எல்லை வரை பல்வேறு சிவன் கோவில்கள் உள்ளன. அதன் அமைப்பும் வழிபாட்டு முறையும் வித்யாசமாக இருப்பதை நாம் கேள்விபட்டிருப்போம். அந்த வகையில் இந்தியாவில் இருக்கும் நெய் லிங்கம் பற்றி கேட்டதுண்டா?

4000 ஆண்டுகளுக்கு முன்பு நெய்யால் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் லிங்கம் இந்தியாவில் உள்ளது. கடும் வெப்பத்திலும், கோடைக்காலத்திலும் உருகாத இந்த அதிசய நெய் லிங்கத்தை பற்றி தெரிந்துகொள்வோம்.

கேரளாவில் இருக்கும் சிவன் கோவில்களிலேயே மிகவும் பிரபலமானது திருச்சூரில் இருக்கும் பகவன் ஸ்ரீ வடக்குநாதர் ஆலயமாகும்.

இது விஷ்ணுவின் அவதாரமான பகவான் பரசுராமரால் உருவாக்கப்பட்ட முதல் ஆலயம் என்று கூறப்படுகிறது இந்த வடக்குநாதர் ஆலயம் 4000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

இந்த கோவிலில் தான் இந்த அதிச நெய் லிங்கம் உள்ளது. இந்த லிங்கம் உருவாக ஒரு புராண வரலாறு உள்ளதாக கூறப்படுகிறது.

விஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் பல ஷத்ரிய மன்னர்களை கொல்கின்றார். தான் செய்த பாவங்களை போக்க திருச்சூரில் ஒரு மேடான பகுதியில் ஒரு கோவில் அமைக்கிறார்.

அதே நேரம் இறைவனின் சிவ கணங்களுள் ஒருவரான சிம்மோதரனிடம் பூவுலகில் தாம் தங்குவதற்கு ஏற்ற இடத்தை தேர்வு செய்து வரும்படி சிவபெருமான் கட்டளையிட்டார்.

அதன்படி இன்றைய திருச்சூர் வந்த சிம்மோதரன் இங்கே பரசுராமர் சிவாலயம் அமைக்கும் இடம் வந்ததும் மெய்மறந்து அங்கேயே தங்கிவிட்டார். திரும்பி வராத அவரைக் கண்டு கோபங்கொண்ட சிவபெருமான் தன் காலால் சிம்மோதரனை எட்டி உதைத்தார்.

அப்போது சிவனின் கோபத்தை தணிக்க பரசுராமர் சிவன் மீது நெய் ஊற்றி அவரை குளிர்சியாக்கி கோபத்தை குறைக்கிறார். அப்போது சிவன் லிங்கமாக மாறியதாக கூறப்படுகிறது.

இந்த நெய் லிங்கம் 12 அடி உயரம், 25 அடி அகலம் எனும் அளவில் உள்ளது. அமர்நாத் கோவில் லிங்கத்தைப் 'பனிலிங்கம்' என்று அழைப்பது போல், இந்தக் கோவில் இறைவனை 'நெய்லிங்கம்' என்று சிறப்புப் பெயரால் அழைக்கின்றனர்.

Vadakkunnathan Temple: Everything You Need To Know About This Popular Temple
கடற்கரை முதல் கோவில்கள் வரை- ஒடிசாவில் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன?

இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் போதும் தீப ஆராதனை செய்யும் போது உருகுவதில்லையாம், இந்த கோயிலில் கொடுக்கப்படும் பிரசாதத்தை உண்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது இங்கு உள்ள மக்களின் நம்பிக்கை

அதே போல் இந்த கோயிலில் உலக புகழ் பெற்ற பூரம் திருவிழாவும் பிரபலமானது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் பூரம் தினத்தில் நடக்கும் இந்த விழாவை பார்க்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகை தருவார்கள்.

Vadakkunnathan Temple: Everything You Need To Know About This Popular Temple
திருப்பதி முதல் சபரி மலை வரை: இந்தியாவின் பணக்கார கோவில்கள் என்னென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com