சந்திரயான் 3 மிஷனின் போது இந்த தென்னிந்திய உணவை சாப்பிட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் - ஏன்?

சந்திரயான் 3 மிஷனில் பணியாற்றிய விஞ்ஞானிகள் மசாலா தோசை மற்றும் ஃபில்டர் காபி தான் சாப்பிட்டனர்.
சந்திரயான் 3: மசாலா தோசை சாப்பிட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள்! ஒரு அடடே தகவல்
சந்திரயான் 3: மசாலா தோசை சாப்பிட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள்! ஒரு அடடே தகவல்Twitter
Published on

விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை ஏந்திச் சென்ற சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தை அடைந்தது.

கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி நடந்த இந்த வரலாற்று நிகழ்வை இன்று வரை பேசிக் கொண்டு இருக்கிறோம். இன்னும் பல ஆண்டுகளுக்கு பேசத் தான் போகிறோம்.

சந்திரயான் நிலவை அடைந்ததில் இருந்து அதன் பணி என்ன?நிலவில் இதற்கு முன்னர் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் என்ன? எந்தெந்த நாடுகள் நிலவுடன் தொடர்புகொண்டுள்ளது என்று வெவ்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்தாகிவிட்டது.

தற்போது சந்திரயான் 3 தொடர்பான இன்னுமொரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

சந்திரயான் 3 மிஷனில் பணியாற்றிய விஞ்ஞானிகள் மசாலா தோசை மற்றும் ஃபில்டர் காபி தான் சாப்பிட்டனர் என்பது தான் அந்த தகவல்.

அதுவும் தினமும் மாலை 5 மணிக்கு இந்த உணவை அவர்களுக்கு வழங்கியதாக விஞ்ஞானி வெங்கடேஸ்வரா சர்மா என்பவர் ஒரு நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.

தினமும் இதனை சாப்பிட்ட விஞ்ஞானிகள் மிகவும் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்ததாகவும் அது அவர்களை நீண்ட நேரம் உற்சாகத்துடன் பணியாற்ற உதவியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்

சந்திரயான் 3: மசாலா தோசை சாப்பிட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள்! ஒரு அடடே தகவல்
சந்திரயான் 3: முட்டி மோதும் உலக நாடுகள் - நிலவின் தென் துருவத்தில் அப்படி என்ன சிறப்பு?

தென்னிந்தியாவின் பிரதானமான உணவுகளாகும் தோசை மற்றும் ஃபில்டர் காபி. குறிப்பாக பெங்களூருவாசிகளின் ஃபேவரெட்டான காம்போ இந்த மசாலா தோசை மற்றும் காபி.

சந்திரயான்-3 குழு பெங்களூரில் உள்ள இஸ்ரோ டெலிமெட்ரி, டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க்கில் (ISTRAC) பணிபுரிந்தது. இதனால் இவர்களுக்கு இந்த உணவினை வழங்கியிருக்கலாம்.

இந்த சந்திரயான் 3 மிஷனை வெற்றிகரமாக இந்திய விஞ்ஞானிகள் செய்து முடித்ததில், மசாலா தோசைக்கும் காபிக்கும் கூட பெரும் பங்கு உள்ளது.

சந்திரயான் 3: மசாலா தோசை சாப்பிட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள்! ஒரு அடடே தகவல்
சந்திரயான் 3: நிலவில் சிதறி கிடக்கும் 96 மனித கழிவு பைகள் - நாசாவின் திட்டம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com