கர்நாடகா : இங்கு ஆண்களுக்கு மட்டுமே அனுமதி - இந்த இந்திய கோவில் குறித்து தெரியுமா?

இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில விதிகள், ஆண்கள் வளாகத்திற்குள் நுழைந்து பிரார்த்தனை செய்யலாம், ஆனால் அவர்கள் அதை பூசாரி முன்னிலையில் சத்தமாக தான் செய்ய வேண்டும். பெண்களுக்கு இங்கு அனுமதி இல்லை, ஆண்கள் பிரசாதத்தை வீட்டிற்கு கூட எடுத்துச் செல்லக்கூடாது.
This Karnataka Temple Dedicated To A Watchman Allows Only Men To Enter
This Karnataka Temple Dedicated To A Watchman Allows Only Men To EnterTwitter
Published on

வரலாறு மற்றும் கலாச்சாரம் பற்றிய புரிதலில் இந்தியாவில் உள்ள கோவில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா 2 மில்லியனுக்கும் அதிகமான கோவில்களைக் கொண்ட நாடு.

ஒவ்வொரு ஆண்டும், பல நூற்றாண்டுகளாக இருக்கும் கோயில்களைப் பற்றி புதிதாக கண்டுபிடிப்பதால் அந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது. ஒவ்வொரு கோவிலுக்கும் தனித்துவமான பின்னணிகள் காணப்படுகின்றன.

அந்த வகையில் ஊர் காவலர் ஒருவருக்காக அர்பணிக்கப்பட்ட ஒரு கோவில் குறித்து தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள சங்கர்கலி கிராமத்தில் தான் இந்த கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலை சுற்றி வரலாற்றுச் சிற்பங்கள் எதுவும் தென்படவில்லை.

இந்தக் கோவிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், அதன் முன் ஒரு விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். சுமார் ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் சங்கர்கலி கிராமத்தில் இரவுக் காவலராகப் பணியாற்றிய ரவல்கட்டா பாபாவின் கோவில் இது என்று சொல்லப்படுகிறது.

இந்த கிராமம் வனப்பகுதிக்கு அருகாமையில் இருப்பதால் விலங்குகள் தாக்குவது அடிக்கடி நிகழும். அப்போது பாபா தான் கிராமத்தின் வீடுகளையும் மக்களையும் பாதுகாத்ததாக கூறப்படுகிறது.

இன்றுவரை, ரவல்கட்டா பாபா எப்போது வாழ்ந்தார் என்பது குறித்த தகவல்கள் கிராமத்தில் யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. கோயில் மற்றும் சடங்குகள் தங்களுக்கு நினைவிருக்கும் வரை இருந்ததாக கிராம மக்கள் கூறுகிறார்கள். இதனால், அதைத் தொடர மக்கள் முடிவு செய்தனர்.

ராவல்கட்டா பாபா, தனது வீட்டை விட்டு இந்த கிராம மக்களை பாதுகாத்ததாக உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில விதிகள், ஆண்கள் வளாகத்திற்குள் நுழைந்து பிரார்த்தனை செய்யலாம், ஆனால் அவர்கள் அதை பூசாரி முன்னிலையில் சத்தமாக தான் செய்ய வேண்டும்.

பெண்களுக்கு இங்கு அனுமதி இல்லை, ஆண்கள் பிரசாதத்தை வீட்டிற்கு கூட எடுத்துச் செல்லக்கூடாது, பெண்கள் சாப்பிட்டுவிடுவார்களோ என இந்த விதியை கடைபிடிகின்றனர்.

This Karnataka Temple Dedicated To A Watchman Allows Only Men To Enter
யம தர்மராஜாவுக்காக கட்டப்பட்ட கோவில் குறித்து தெரியுமா? இந்தியாவில் எங்கு இருக்கிறது?

இந்த விதிகள் எப்போது பின்பற்றப்படுகின்றன என்பது கிராமத்தில் யாருக்கும் தெரியாது, ஆனால் இப்போது, இது கிட்டத்தட்ட ஒரு பாரம்பரியமாக மாறியதால், மக்கள் அதை நம்புகிறார்கள்.

கிராமவாசியான வசந்த் இது குறித்து கூறுகையில், “பாபா ஒரு கையில் குச்சியும், மற்றொரு கையில் மண்ணெண்ணெய் விளக்கையும் ஏந்தியபடி கிராமத்தில் சுற்றி வருவார். அவரது தடியில் சிறிய மணிகள் கட்டப்பட்டிருக்கும்.

தினமும் மதியம் ரயிலில் வந்து, இரவில் கிராமத்தைக் கவனித்துவிட்டு, காலையில் திரும்புவார். பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் கிராமத்தில் உள்ள பல வீடுகளின் கதவுகள் திறந்தே வைக்கப்படுகிறது. மதம் மற்றும் ஜாதி வேறுபாடின்றி, பாபா மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

This Karnataka Temple Dedicated To A Watchman Allows Only Men To Enter
குஜராத்: 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மோதேரா சூரிய கோவில் - இதன் சிறப்புகள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com