கூகுள், காபி, ஒன் பை டூ - குழந்தைகளுக்கு விநோத பெயர் சூட்டும் ஒரு அடடே இந்திய கிராமம்!

கர்நாடகாவில் உள்ள பத்ராபூர் என்ற கிராமத்தில் பிரபலமான ஆட்கள் அல்லது பொருட்களின் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டும் முறையை 15 வருடங்களுக்கு முன் இவர்கள் தொடங்கி இன்று வரை கடைப்பிடித்து வருகின்றனர்
பத்ராபூர் கிராம மக்கள்
பத்ராபூர் கிராம மக்கள்ட்விட்டர்

இந்த கர்நாடகா கிராமத்தில் உள்ள குழந்தைகளின் பெயர் கூகுள், காபி, அமிதாப், ஹை கோர்ட். நம்பவில்லையா?

நீங்க நம்பலனாலும் அது தான் நெசம்!

நம் குழந்தைகளுக்கு வித்தியாசமான பெயரை வைக்கவேண்டும் என எல்லா பெற்றோரும் நினைப்பதுண்டு. தேடித் தேடி சமஸ்கிருதம், தமிழ், ஆங்க்கிலம், புராணக் கதைகளில் இருந்தெல்லாம் பெயர் வைப்பார்கள். கிரிக்கெட் பிரபலம் ஜான் டி ரோட்ஸ் இந்தியா மீது கொண்ட காதலால் தன் மகளுக்கு இந்தியா எனப் பெயர் சூட்டியிருந்தார்.

இங்கு கர்நாடகாவில் உள்ள பத்ராபூர் என்ற கிராமத்தில் ஹக்கி பிக்கி என்ற பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தான் இந்த விநோத சம்பிரதாயத்தை பின்பற்றி வருகின்றனர். பிரபலமான ஆட்கள் அல்லது பொருட்களின் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டும் முறையை 15 வருடங்களுக்கு முன் இவர்கள் தொடங்கி இன்று வரை கடைப்பிடித்து வருகின்றனர்

யார் இந்த ஹக்கி பிக்கி பழங்குடியினர்?

கர்நாடகாவின் பறவைகள் பிடிக்கும் பழங்குடியினர் இந்த ஹக்கி பிக்கி மக்கள். இவர்களது வழக்கத்தில் மணமகன் தான் மனமகளுக்கு வரதட்சணை தருவார்கள். ஒரு வேளை இவர்கள் பிரிந்தால், திருமணத்தின்போது அளிக்கப்பட்ட வரதட்சணையின் பாதியை அந்த பெண் திருப்பிக்கொடுக்க வேண்டும். ராஜ்புத் வம்சத்து அரசன் ராணா பிரதாப்புடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

குழந்தைகளுக்கு கூகுள், காபி, டாலர், ஒன் பை டூ என்று இவர்கள் பெயரிட்டுள்ளனர். கேட்கும்போது நமக்கு இது நகைச்சுவையாக இருந்தாலும், இங்குள்ள குழந்தைகள் இதனை விளையாட்டாக நினைக்கவில்லை. அவர்களுக்கு அவர்களின் பெயரின் மீது பெருமை இருக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் ஒரு பின் கதையும் உள்ளது.

உதாரணத்திற்கு, ஒரு குழந்தையின் பெயர் மைசூர் பாக். அந்த குழந்தையின் பெற்றோர் அந்த இனிப்பு வகையை மிகவும் ருசிகரமான ஒன்றாக நினைக்கின்ரனர். விரும்புகின்றனர். அதானல் தங்கள் குழந்தைக்கு இந்த இனிமையான பெயர். இதே பெயருடன் தான் இவர்கள் பாஸ்போர்ட்களையும் வைத்திருக்கின்றனர், பயணங்களையும் மேற்கொள்கின்றனர்

பத்ராபூர் கிராம மக்கள்
சூரிய கோவில் அடையாளமாக சூரிய மின்சக்தி: 100% சோலாரில் செயல்படும் ஒரு அடடே கிராமம்!

குழந்தைகளின் பெயர்கள்:

  • காபி

  • கூகுள்

  • பிரிட்டிஷ்

  • அமிதாப்

  • அனில் கபூர்

  • மைசூர் பாக்

  • ஒன் பை டூ

  • பஸ் டிரெயின்

  • இங்கிலீஷ்

  • க்ளுக்கோஸ்

  • காங்கிரஸ்

  • ஜனதா

பத்ராபூர் கிராம மக்கள்
புத்தாடை, விருந்து, பரிசுகள் - இறந்தவர்களை கொண்டாடும் விநோத சடங்கு - எங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com