அவதார் படத்தில் வருவது போல ஒளிரும் காடுகள் - இந்தியாவில் எங்கு பார்க்கலாம்?

பகல் நேரத்தில் இதைப் பார்த்தால், காடு எப்போதும் போலவே இருக்கும். ஆனால் இரவு நேரத்தில் ஒளிரும். எப்படி என்று கேட்கிறீர்களா?
this mysterious glowing forest of India is a surprise package
this mysterious glowing forest of India is a surprise packageTwitter
Published on

இந்தியாவில் பல இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் உள்ளன. அதைக் காண அல்லது அனுபவிக்கும் நம்முடைய ஆயுள் போதாது.

செயற்கை நுண்ணறிவால் கூட உருவாக்க முடியாத சில பொக்கிஷங்கள் இயற்கையில் உள்ளன.

மேற்கு தொடர்ச்சி மலையில் அப்படி ஒரு ஆச்சரியம் உங்களுக்கு காத்திருக்கிறது.

இரவு நேரத்தில் காடு பச்சை நிற ஒளியை வெளியிடுகிறது. கோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இதைக் காணலாம்.

இந்த காட்சியைக் காண, நீங்கள் பீமாசங்கர் வனவிலங்கு காப்பகத்தையும் பார்வையிடலாம். அங்கு இருக்கும் காடு வழக்கத்திற்கு மாறாக இரவில் ஒளிரும். கேட்கவே எவ்வளவு பிரம்மிப்பாக இருக்கிறது.

பகல் நேரத்தில் இதைப் பார்த்தால், காடு எப்போதும் போலவே இருக்கும். ஆனால் இரவு நேரத்தில் ஒளிரும். எப்படி என்று கேட்கிறீர்களா?

இந்த நிகழ்வு மைசீனாவால் ஏற்படுகிறது. மைசீனா எனப்படும் பூஞ்சை, அதிக ஈரப்பதத்துடன் தொடர்பு கொள்ளும்போது ஒளிரச் செய்கிறது.

this mysterious glowing forest of India is a surprise package
உலகின் அமானுஷ்யமான பேய் பிடித்த 5 காடுகள் குறித்து தெரியுமா?

இந்த பாக்டீரியாக்கள் பின்னர் கிளைகள், அழுகும் இலைகள் மற்றும் பூஞ்சை போன்றவற்றில் ஒட்டிக்கொள்கின்றன. இதன் விளைவாக காடு பளபளக்கிறது.

மழைக்காலத்தில் அதிகம் அறியப்படாத அஹுபே கிராமத்தில் இந்தக் காட்சியைக் காணலாம். பாக்டீரியா ஏன் ஒளிரும் தன்மையைக் கொண்டுள்ளது என்பதற்கு விஞ்ஞானிகளிடமும் பதில் இல்லை.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இருளில் ஒளிரும் இந்த ஒளியானது அடிப்படையில் ‘பயோலுமினென்சென்ஸ்’ எனப்படும் மிதவை உயிரிகளால் நடக்கக்கூடிய இயற்கையான நிகழ்வாகும். இது கடல்களில் மட்டுமல்ல, காடுகளிலும் காணப்படுகிறது.

this mysterious glowing forest of India is a surprise package
”இது வேற்றுகிரகம் இல்லை” இரவில் ஒளிரும் கடற்கரை - எங்கு இருக்கிறது? அறிவியல் காரணமென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com