பூமிக்கடியில் 230 அடி ஆழம்; குகையில் 500 நாட்கள் தனியாக வாழ்ந்த பெண் - எப்படி இருந்தார்?

இதனைவிட மிக முக்கியமான விஷயம் எதுவென்றால் குகைக்குள் வெளிச்சம் வராது தனது தலையில் உள்ள பேட்டரி லைட் உதவியுடன் நாட்களை கடத்தியுள்ளார்.
பூமிக்கடியில் 230 அடி ஆழம்;  குகையில் 500 நாட்கள் தனியாக வாழ்ந்த பெண் - என்ன காரணம்?
பூமிக்கடியில் 230 அடி ஆழம்; குகையில் 500 நாட்கள் தனியாக வாழ்ந்த பெண் - என்ன காரணம்?Twitter

500 நாட்கள் மனிதத் தொடர்பு இல்லாமல் தனியாக குகையில் வாழ்ந்து ஸ்பானிய வீராங்கனை ஒருவர் புதிய சாதனை படைத்துள்ளார்.

கற்கால மனிதர்கள் தங்களது வாழ்க்கையை குகையில் தொடங்கினர். தற்போது இருக்கும் நவீன கால வாழ்க்கைக்கு பழக்கப்பட்ட இந்த மனித சமூகம் மீண்டும் கற்கால வாழ்க்கைக்கு சென்று வாழ்வது என்பது கனவிலும் சாத்தியமில்லை , ஆனால் ஸ்பெயினைச் சேர்ந்த 50 வயதான பெண் கற்கால வாழ்க்கைக்கு சென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

பியாரிட்ஸ் ஃப்ளாமினி (Beatriz Flamini) என்ற மலையேற்ற வீராங்கனையான இவர் உலக சாதனை முயற்சிக்காக தனது 48 வயதில் ஸ்பெயினின் உள்ள க்ரனடா தீவில் பூமிக்கடியில் சுமார் 230 அடி ஆழத்தில் இருக்கும் குகைக்கு செல்ல திட்டமிட்டார்.

அதன்படி கடந்த 2021 ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி அந்த குகைக்குள் சென்றார். அவருக்கு 2 கேமராக்கள் , 1000 லிட்டர் தண்ணீர் 60 புத்தங்கள் தான் அந்த 500 நாட்கள் துணையாக இருந்தன

மற்றபடி இவருக்கு வெளி உலக தொடர்பே கிடையாது. குகையில் இருந்த போது பியாட்ரிஸ்க்கு உக்ரைன் போர், விலைவாசி உயர்வு, எலிசபெத் மறைவு , துருக்கி நிலநடுக்கம் போன்ற உலக நிகழ்வுகள் எதுவுமே தெரியாது.

இதனைவிட மிக முக்கியமான விஷயம் எதுவென்றால் குகைக்குள் வெளிச்சம் வராது தனது தலையில் உள்ள பேட்டரி லைட் உதவியுடன் நாட்களை கடத்தியுள்ளார். தனக்கு மன உளைச்சல் வராமல் இருக்க உடற்பயிற்சி, படிப்பு , ஓவியம் வரைதல், கம்பளி பின்னுதல் என பொழுதை கழித்துள்ளார்.

பூமிக்கடியில் 230 அடி ஆழம்;  குகையில் 500 நாட்கள் தனியாக வாழ்ந்த பெண் - என்ன காரணம்?
குரங்குக்கு பாலூட்ட கற்றுக்கொடுக்கும் பெண் - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

500 நாட்களுக்கு பிறகு குகையினை விட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார்.

அதில் 65 வது நாளுக்குப் பிறகு தான் நேரத்தை கணக்கிடவில்லை என கூறினார். அதே சமயம் தொந்தரவாக இருந்த ஒரே விஷயம் ஈக்கள் தான் என்று கூறினார் ஃபிளாமினி.

ஈக்கள் வந்ததால் தான் நான் குழம்பி போனேன். சில நேரம் ஈக்கள் என்னை சூழ்ந்து இருக்கும். ஆனால் அது எனக்கு சிக்கலனதாக இல்லை எனக் கூறினார்

பூமிக்கடியில் 230 அடி ஆழம்;  குகையில் 500 நாட்கள் தனியாக வாழ்ந்த பெண் - என்ன காரணம்?
வியட்நாம் : மனித காலடி தடமே பதியாத உலகின் மிக பெரிய குகை - உள்ளே இருக்கும் தனி ஒரு உலகம்!

ஃப்ளாமினியிடம் உள்ளே 500 நாட்கள் கழித்து வெளியே வந்த உங்களின் முகத்தில் பயமோ சோகமோ இல்லையே? என செய்தியளர்கள் கேட்டதற்கு அவர் கூறிய பதில்,

"நீங்கள் ஒரு கனவைக் கண்டு அதை நிறைவேற்றினால் நீங்கள் எப்படி உணருவீர்கள்? ஆகவே நான் அழுது கொண்டே வெளியே வரவா?" என அழகான புன்னகையுடன் பதில் கூறினார் ஃபிளாமினி.

2010 ஆம் ஆண்டு சிலியில் ஒரு சுரங்கம் இடிந்து விழுந்த போது 688 அடியில் சிக்கிய 33 சுரங்க தொழிலாளர்கள் நிலத்தடியில் நீண்ட நாள் வாழ்ந்தவர்களுக்கான விருது வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஃபிளாமினி 500 நாட்கள் இருந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

பூமிக்கடியில் 230 அடி ஆழம்;  குகையில் 500 நாட்கள் தனியாக வாழ்ந்த பெண் - என்ன காரணம்?
31,000 ஆண்டுகளுக்கு முன் அறுவை சிகிச்சை செய்தனரா குகை மனிதர்கள் ? ஆய்வில் வெளியான தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com