முன்னணி டேட்டிங் தளமான டிண்டர் தனது வலைத்தள பக்கத்தில் பகிர்ந்த மீம் இணையத்தைக் கவர்ந்தது.
சமூக வலைத்தளங்களில் பேச்சுகளை உருவாக்குவது நிறுவனங்களின் முக்கிய விளம்பரப்படுத்தும் முறையாக மாறிவிட்டது.
ஸ்விக்கி சோமேட்டோ போன்ற நிறுவனங்கள் நம் பர்சனல் நோட்டிஃபிகேஷனில் விளையாடுகின்றன என்றால்... சில நிறுவனங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ சமூகவலைத்தள பக்கத்தில் மீம்ஸ் போட்டு வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றன.
மக்களுடன் நேரடித் தொடர்பினை ஏற்படுத்தும் சமூக வலைத்தளங்கள் மார்கெட்டிங்கின் புதிய பரிமாணமாக உருவாகியிருக்கின்றன.
இப்போது டிண்டர் பதிவிட்டுள்ள பதிவில் செட்டாகாத உறவுகள் குறித்துப் பேசியுள்ளனர். அதாவது, ஒரு மூடிய ஐஸ்கிரீம் டப்பாவின் புகைப்படம் "அவர்கள் (உங்கள் இணை) பேச ஆரம்பிக்கும் போது" என்றும் திறந்த ஐஸ்கிரீம் டப்பாவில் இஞ்சி, மிளகாய் இருக்கும் படத்தைப் பகிர்ந்து"அவர்களின் முன்னாள் காதல் பற்றியே பேசிக்கொண்டிருக்கும் போது" எனவும் எழுதிய மீமை பகிர்ந்தனர். இது இணையத்தில் வைரலானது.
இந்த நகைச்சுவையான பதிவுக்குப் பிறகு இதே டெம்ப்ளேட்டில் பல மீம்கள் இணையத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கின.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust