மீம் டெம்ப்ளேட்டாக மாறிய நாடாளுமன்றம் - சசி தரூர் விளக்கம்

அரசியல் மீம்களை ரசிப்பதற்குத் தனி பட்டாளமே உண்டு. சமீபத்தில் ட்ரெண்டான வைப் மீம் டெம்ப்ளேட்ஸ் வரிசையில் இந்த டெம்ப்ளேட்டும் இணைந்திருக்கிருக்கிறது.
Meme Template
Meme TemplateTwitter
Published on

நாடாளுமன்ற உரைக்கு நடந்துகொண்டிருக்கும் போது பக்கத்தில் இரண்டு உறுப்பினர்கள் பேசிக்கொண்டிருந்த வீடியோ வைரலானது. மீம் கிரியேட்டர்களுக்கு அந்த புகைப்படம் மற்றும் வீடியோவை வரப்பிரசாதமாக ஏற்றுக்கொண்டு தங்களின் தார்மீக கடமையை நிறைவேற்றி, இணையம் முழுவதும் அந்த புகைப்படம் பரவ லாஃபிங் எமோஜிகள் பறந்தன.

அந்த புகைப்படத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபரூக் அப்துல்லா உரையாற்றிக்கொண்டிருக்க, காங்கிரஸ் உறுப்பினர்கள் ஷாஷி தரூர் மற்றும் சுப்ரியா பேசிக்கொண்டிருந்தனர். இதன் காதல் பாடல் போட்டு மீம் கிரியெட்டர்கள் மகிழ்ந்து வர அவர்களுக்கு விளக்கமளித்துள்ளார் தரூர்.

Meme Template
பீஸ்ட் : “அரசியல் தலைவர்களை விமர்சிக்காதீர்கள்” - விஜய் அறிக்கை பின்னணி

“நாடாளுமன்றத்தில் சிறிது நேரம் நானும் சுப்ரியா அவர்களும் பேசிக்கொண்டிருந்த புகைப்படத்தைப் பார்த்து மகிழ்வோரே, அவர் என்னிடம் கொள்கை தொடர்பான கேள்வியைக் கேட்டார். நான் அவருக்கு விளக்கமளித்தேன். அவர் மெதுவாகப் பேசியதால் நான் ஃபரூக்கை தொந்தரவு செய்ய வேண்டாம் என நினைத்து அருகில் சென்றேன். ஃபரூக்கிற்கு அடுத்ததாக சுப்ரியா பேச வேண்டியிருந்தது.” எனத் தனது ட்விட்டரில் கூறியிருக்கிறார் தரூர்.

Meme Template
இந்தியாவில் X, Y, Z மற்றும் Z+ வகை பாதுகாப்பு என்றால் என்ன?

மீம் கிரியேட்டர்கள் பொழுதுபோக்குவது, கலாய்ப்பது, விமர்சிப்பதைத் தவிர்த்து செய்திகளை இளைஞர்களுக்குக் கடத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அரசியல் மீம்களை ரசிப்பதற்குத் தனி பட்டாளமே உண்டு. சமீபத்தில் ட்ரெண்டான வைப் மீம் டெம்ப்ளேட்ஸ் வரிசையில் இந்த டெம்ப்ளேட்டும் இணைந்திருக்கிருக்கிறது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com