பீச் பிக்னிக் போகிறீர்களா? இந்த விஷயங்களை நினைவில் வைத்து கொள்ளுங்கள்

நமது அந்த பிக்னிக்கை இனிமையானதாக மாற்ற சில டிப்களை தான் இந்த பதிவில் தொகுத்துள்ளோம்.
பீச் பிக்னிக் போகிறீர்களா? இந்த விஷயங்களை நினைவில் வைத்து கொள்ளுங்கள்
பீச் பிக்னிக் போகிறீர்களா? இந்த விஷயங்களை நினைவில் வைத்து கொள்ளுங்கள்canva
Published on

வீக்கெண்ட் வந்தால் கடற்கரைக்கு குடும்பத்தினருடன் சென்று விளையாடி மகிழ்ந்து வருவோம். வெளிநாட்டவர்கள் பீச்சில் வெயிலில் அமர்ந்து இளைப்பாறி வருவார்கள். பீச்சுக்கு மினி பிக்னிக் எல்லாம் செல்வோம்.

அப்படி செல்லும்போது நமது அந்த பிக்னிக்கை இனிமையானதாக மாற்ற சில டிப்களை தான் இந்த பதிவில் தொகுத்துள்ளோம்.

ஜிப்லாக் கவர்கள்

பீச்சில் தண்ணீர், மணல் என எல்லா இடங்களிலும் விளையாடுவோம். நம் அனைவரின் கைகளிலும் செல்போன் போன்ற கேட்கெட்டுகள் அவசியம் இருக்கும். இதனை பாதுகாப்பது பெரும் வேலை தான்.

இதனால் கையில் கொஞ்சம் ஜிப்லாக் கவர்களை எடுத்துசெல்லலாம். இவற்றில் நம் செல்போன் போன்ற தண்ணீரில் நனையக்கூடாத பொருட்களை போட்டு வைக்கலாம்.

சன்ஸ்க்ரீன் க்ரீம்கள்

என்ன தான் சூரிய வெளிச்சம் நமது சருமத்திற்கு நல்லது என்றாலும் குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு அது நமக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும். இதனால் தான் சரும நிபுணர்கள் நம்மை சன் ஸ்க்ரீன் பயன்படுத்த அறிவுரைக்கின்றனர்.

இதுபோல பீச்சுக்கு செல்லும்போது, சன் ஸ்க்ரீன் சருமத்தில் தடவிச் செல்லலாம்.

நாம் கடற்கரையில் இருக்கப்போகும் நேரத்தை பொறுத்து ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் போட்டுக்கொள்வது அவசியம்.

கற்றாழை ஐஸ்கட்டிகள்

கற்றாழை சருமத்திற்கு சிறந்த மருந்து. வெகு நேரம் வெயில் படுவதால் சிலருக்கு சருமத்தில் எரிச்சல் போன்ற உணர்வு ஏற்படலாம். இதனால் கற்றாழை ஐஸ் கட்டியை பயன்படுத்தலாம். கற்றாழை சாற்றை ஐஸ் கட்டிகளாக மாற்றி கையில் எடுத்துக்கொள்ளலாம்

பீச் பிக்னிக் போகிறீர்களா? இந்த விஷயங்களை நினைவில் வைத்து கொள்ளுங்கள்
இரவில் ஒளிரும் ஒரு அமானுஷ்ய கடற்கரை - ஓர் ஆச்சர்ய தகவல்

back up bag

எப்போதும் பீச்சுக்கு செல்லும்போது கையில் எக்ஸ்டிராவாக இன்னொரு பேக் எடுத்து செல்லலாம். இதில் நாம் விளையாடும்போது பயன்படுத்திய ஈரத் துணிகளை போட்டு வைக்க உதவும்.

காலணிகள்

கடற்கரைக்கு செல்லும்போது ஷூ அல்லது செப்பல்களை தவிர்ப்பது நல்லது. பதிலாக flip flop வகை காலணிகளை அணிந்து செல்லலாம். இவை நமது காலணிகள் சேதமடையாமல் பாதுகாக்கும், மேலும் பீச் மணலில் நடக்கவும் இந்த வகை காலணிகள் உதவியாக இருக்கும்.

பீச் பிக்னிக் போகிறீர்களா? இந்த விஷயங்களை நினைவில் வைத்து கொள்ளுங்கள்
Travel: பயணங்கள் இனிமையாக அமைய தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள் என்னென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com