Travel: பயணங்கள் இனிமையாக அமைய தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள் என்னென்ன?

ஒரு சில அத்தியாவசிய விஷயங்களை நாம் பயணம் மேற்கொள்ளும்போது நினைவில் வைத்திருப்பது அவசியமாகிறது. நாம் பயணம் செய்யும்போது அடிப்படையாக தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Travel: பயணங்கள் இனிமையாக அமைய தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள் என்னென்ன?
Travel: பயணங்கள் இனிமையாக அமைய தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள் என்னென்ன?Canva
Published on

சுற்றுலா, நீண்ட பயணங்கள் மேற்கொள்பவர்கள் இரண்டு வகைப்படுவர். எங்கு செல்கிறோம், எப்போது, எப்படி செல்கிறோம், என்னென்ன தேவைப்படும், எவ்வளவு செலவாகும் என திட்டமிட்ட பயணமாக செல்வது ஒரு வகை.

எந்த ஒரு பிளானும் இல்லாமல், நடப்பது நடக்கட்டும் என்ற அட்வென்சர் ட்ரிப் செல்பவர்கள் இன்னொரு வகை. ஆனால், யாராக இருந்தாலும் ஒரு சில அத்தியாவசிய விஷயங்களை நாம் பயணம் மேற்கொள்ளும்போது நினைவில் வைத்திருப்பது அவசியமாகிறது.

நாம் பயணம் செய்யும்போது அடிப்படையாக தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

பயணக்கால அவசர உதவி

பயணங்களின் போது எதிர்பாராத அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடும் என்பது தவிர்க்க முடியாத உண்மை. இந்த எமர்ஜன்சிகளுக்கு நாம் தயாராக இருக்கவேண்டியது அவசியம். காப்பீட்டு திட்டங்கள், சட்டம் சார்ந்த உதவிகளை எளிதில் எந்த தடங்கலுமின்றி பெற வழிவகை செய்துகொள்வது அவசியம்.

பல காப்பீடு நிறுவனங்களும் தற்போது பயணக்காப்பீடுகளை வழங்கி வருகிறது. அதனை பயன்படுத்திக்கொள்ளலாம்

சீனியர் சிட்டிசன் அசிஸ்டன்ஸ்

சுற்றுலாக்கள், பயணங்கள் இளம் வயதினருக்கு மட்டுமே என்று வரையறை இல்லை தானே? 50, 60 ஏன் 70களில் கூட சோலோ ட்ரிப் செல்பவர்கள் குறித்து நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

அப்படி தனியாகவோ, அல்லது துணையுடனோ டிராவல் செய்யும் வயது முதிர்ந்தவர்களுக்கு மிக முக்கியமான பயணத்தேவை இன்சூரன்ஸ். தவிர அவர்கள் செல்லுமிடத்தில் பேசும் மொழி தெரியாமல் போகலாம், பயண நேரம் சற்றே அவர்களை அசதியடைச் செய்யலாம்.

பயணம் மேற்கொள்ளும் இடங்களுக்கு நேரக் குறிப்போடு செல்ல அவர்களுக்கு ஷெடூல் அமைத்துக் கொடுக்கலாம். அவர்கள் செல்லும் ஊரில் ஒரு மொழிப்பெயர்ப்பாளரை பணியமர்த்தலாம்

Travel: பயணங்கள் இனிமையாக அமைய தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள் என்னென்ன?
Travel: காதல் தோல்விக்கு மியூசியமா? உலகின் வித்தியாசமான சுற்றுலா தலங்கள்!

டிராவல் பிளானர்

இந்த டிராவல் பிளானர் சிறியவர், பெரியவர் என எல்லோருக்குமே உதவும். எங்கு செல்ல வேண்டும், எவ்வளவு தூரம், அந்த தூரத்தை கடக்க எவ்வளவு நேரம் ஆகும், எப்படி செல்லவேண்டும் என தோராயமாக ஒரு பிளானை நாம் கையில் வைத்துக்கொள்ளலாம்.

நம் டெஸ்டினேஷனுக்கு சென்ற பிறகு இது மாறுபடலாம். ஆனால் முற்றிலும் வேறுபடாது அல்லவா? இதனால் நாம் செல்லும் இடங்களில் நாம் நிம்மதியாக நேரத்தைக் கழிக்கலாம். அவசர அவசரமாக பார்த்தும் பார்க்காமல் வரவேண்டாம்.

மேலே குறிப்பிட்டுள்ளவை நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் எனலாம். இதை தவிர கூடுதலாக இன்னும் இரண்டு விஷயங்கள் பயணம் செய்யும்போது நாம் நினைவில் வைத்துக்கொள்ளலாம்.

Travel: பயணங்கள் இனிமையாக அமைய தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள் என்னென்ன?
Travel: நீங்கள் பயணம் செய்வதை விரும்புகிறீர்களா? பயணக் காப்பீடு ஏன் முக்கியமானது?

லாஞ்சுகள் (ஓய்வறை)

விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் நாம் பயணம் செய்யவேண்டிய விமானம் அல்லது ரயில் வரும் வரை ஓய்வெடுக்க தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருக்கும். குளிர்சாதன வசதிகளுடன் கூடிய அறைகள், சாதாரணமான அறைகள் என நமக்கு ஏற்ற வகையில் அறைகள் இருக்கும்.

விமான நிலையங்களில் இன்னும் ஒரு படி மேலே சென்று, இணைய வசதி, சார்ஜிங் வசதி, உணவு, குளிர்பானங்கள் போன்றவையும் கிடைக்கும்.

ஆகையால், ஒரு வேளை நம் பயணம் தாமதமானாலும், இந்த ஓய்வறைகளில் காத்திருக்கலாம்

மீட் அண்ட் க்ரீட் சேவைகள்

தற்போது நாம் சுற்றுலா செல்லும் இடங்களை விட விமான நிலையங்களே அழகாகி விட்டன. அதனால் நாம் தாராளமாக நமது நேரத்தை இங்கு சுற்றிப்பார்த்து கழிக்கலாம்.

தவிர நிறைய சிறிய சிறிய ஹாஸ்பிடாலிட்டி பிராண்டுகள், நிறுவனங்கள் பயணிகளின் தேவைக்கு ஏற்ப அங்கு ஷாப்பிங் செய்ய கடைகள், மசாஜ், மினி தியேட்டர், கஃபேக்கள் உள்ளிட சேவைகளை வழங்கத் தொடங்கியுள்ளன

Travel: பயணங்கள் இனிமையாக அமைய தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள் என்னென்ன?
பயணம் செய்ய விரும்பும் பெண்களுக்கு இந்த பொருட்களை Gift ஆக கொடுக்கலாம் - என்னென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com