திருப்பதி லட்டு தயாரிக்க இனி நந்தினி நெய் இல்லை - ஏன்? சுவையில் மாற்றம் ஏற்படுமா?

சுமார் 50 ஆண்டுகளாக திருப்பதி பிரசாதமான லட்டுவை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கர்நாடக அரசின் நந்தினி நெய் இனி பயன்படுத்தப்படாது எனவும், டெண்டர் வேறு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன
திருப்பதி லட்டு தயாரிக்க இனி நந்தினி நெய் இல்லை - ஏன்? சுவையில் மாற்றம் ஏற்படுமா?
திருப்பதி லட்டு தயாரிக்க இனி நந்தினி நெய் இல்லை - ஏன்? சுவையில் மாற்றம் ஏற்படுமா?ட்விட்டர்
Published on

இந்தியாவின் பிரபலமான கோவில்களில் ஒன்று திருப்பதி. இது உலகின் இரண்டாவது பணக்கார கோவிலும் கூட. வாரத்தின் எந்த நாளிலும் கூட்டம் அலைமோதும் இந்த கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களும் பிரபலம்.

இந்தியாவின் மற்ற எந்த கோவில்களும், அல்லது கடைகளிலும் கூட இந்த லட்டு கிடைக்காது. இது திருப்பதியின் அடையாளம். பெருமாளுக்கு படைக்க பிரத்தியேகமாக தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய் மாற்றப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

திருப்பதியில் லட்டு தயாரிப்பதற்கு சுமார் 50 ஆண்டுகளாக நந்தினி பாலி நிறுவனத்தின் நெய் பயன்படுத்தப்படுகிறது. இந்த நந்தினி பால் நிறுவனமானது கர்நாடகா பால் கூட்டுறவு அமைப்பை சேர்ந்ததாகும்.

தமிழகத்தில் எப்படி ஆவின் நிறுவனம் பால் விற்பனை செய்து வருகிறதோ, அப்படி கர்நாடகாவில் கர்நாடகா பால் கூட்டமைப்பு பால் விற்பனை செய்து வருகிறது. இவர்களின் பிராண்ட் தான் இந்த நந்தினி பால்.

தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு, ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நந்தினி பாலின் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியுள்ளது. தனியார் நிறுவனங்களை விட, அரசின் பால் விலை குறைவு என்பதால் கர்நாடகாவில் பரவலாக நந்தினி பாலையே பலரும் வாங்குகின்றனர்.

இந்நிலையில், கடந்த வியாழன் அன்று பாலின் விலையேற்றத்தை நிறைவேற்றியது கர்நாடக அரசு. இதனையடுத்து, திருமலா திருப்பதி தேவஸ்தானம், லட்டு தயாரிக்க வாங்கப்படும் நெய்யின் டெண்டரை குறைந்த விலையில் கிடைக்கும் மற்றொரு நிறுவனத்திடம் வழங்கவுள்ளதாக, கர்நாடகா பால் கூட்டமைப்பின் தலைவர் பீம் நாயக் கூறியுள்ளார்.

பல்லாரி பால் சங்கத்தின் இயக்குநருமான கேஎம்எஃப் தலைவர் நாயக், பல்லாரியில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த ஆண்டு, திருமலை தேவஸ்தானம் ஒரு டெண்டரை வெளியிட்டு அதில் பங்கேற்கச் சொன்னார்கள். எங்கள் நெய்யை குறைந்த விலையில் கொடுக்க முடியாது, குறைந்த விலைக்கு வாங்குபவர்களுக்கு டெண்டர் வழங்கப்படுகிறது. எங்கள் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன, இந்த விலையில் மட்டுமே நாங்கள் வழங்க முடியும் என்று அவர்களிடம் கூறினோம், ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர், ”என்று அவர் கூறினார்.

திருப்பதி லட்டு தயாரிக்க இனி நந்தினி நெய் இல்லை - ஏன்? சுவையில் மாற்றம் ஏற்படுமா?
திருப்பதி முதல் சபரி மலை வரை: இந்தியாவின் பணக்கார கோவில்கள் என்னென்ன?

இதனால், லட்டு தயாரிக்க நெய் வாங்கும் டெண்டர் தற்போது கைமாறியுள்ளது. இனி திருப்பதி லட்டுவின் சுவையில் மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகா பால் கூட்டமைப்பு தற்போது மிகுந்த நிதி நெருக்கடியில் இருப்பதால் விலையேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பீமா நாயக் தெரிவித்திருக்கிறார்.

கர்நாடகா அரசின் இந்த நடவடிக்கைக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னர் பசவராஜ் பொம்மை ஆட்சியின் போது, கர்நாடகாவின் பால் நிறுவனமான நந்தினி நிறுவனத்தை புறந்தள்ளிவிட்டு, குஜராத்தின் அமுல் பால் பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக காங்கிரஸ் அரசு குற்றம் சாட்டியதும் குறிப்பிடத்தக்கது

திருப்பதி லட்டு தயாரிக்க இனி நந்தினி நெய் இல்லை - ஏன்? சுவையில் மாற்றம் ஏற்படுமா?
திருப்பதி : கருவறை மையத்தில் சிலை இல்லையா? பாலாஜி கோவில் குறித்த 5 ரகசியங்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com