இந்தியாவில் பல பிரபலமான, வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் அமைந்துள்ளன. கலாச்சாரத்தை எடுத்துரைப்பதை தாண்டி, இவை நம் நாட்டின், அதிக வருமானம் ஈட்டும் சுற்றுலா தலங்களாகவும் அமைந்துள்ளன. அவற்றில் சில இதோ
கேரளாவின் திருவனந்தபுரத்தில் அமைந்திருக்கிறது பத்மநாப சுவாமி திருக்கோவில். தரவுகளின்படி, இந்த கோவிலின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 90,000 கோடி. தங்க விக்கிரங்கள், தங்கம், மரகதம், வெள்ளி, வைரம், பித்தளை என இங்கு விலைமதிப்பற்ற பொருட்கள் ஏராளம்.
ஏழு மலைகளில் 7வது மலையின் மேல் அமைந்துள்ள திருப்பதி கோவில், இந்தியாவின் பணக்கார கோவில்களில் ஒன்று. இதன் ஓராண்டு மதிப்பு 650 கோடி ரூபாயாகும். ஒவ்வொரு வருடமும் கொடையாக பெறும் சுமார் 3000 கிலோ எடையுள்ள தங்கத்தை, கோவில் நிர்வாகம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வைப்புத்தொகையாக மாற்றுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
கடல்மட்டத்திலிருந்து சுமார் 5,200 அடிக்கு மேல் அமைந்துள்ளது வைஷ்ணோ தேவி கோவில். திருப்பதிக்கு பிறகு இந்தியாவில் அதிகம் பார்க்கப்படும் கோவில்களின் பட்டியலில் இது இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்த கோவிலின் ஓராண்டு வருமானம் சுமார் 500 கோடி ரூபாயாகும்.
1992ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கோவிலின் ஓராண்டு வருமானம் சுமார் 320 கோடி ரூபாய். 380 கிலோ தங்கம், 4000 கிலோ எடையுள்ள வெள்ளி, இதை தவிர டாலர் பவுண்டுகளில் கூட சொத்துகள் உள்ளன.
ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் என்ற இந்த கோவிலின் மேல் தளம் சுமார் 400 கிலோ எடையுள்ள தங்கத்தினால் ஆனது. இந்த கோவிலின் ஓராண்டு வருமானம் சுமார் 500 கோடி ரூபாய்
சுமார் 500 கோடி ரூபாய் ஆண்டு வருமானம் ஈட்டும் இந்த கோவிலுக்கு பக்தர்கள் ஏராளம். சபரிமலைக்கு சீசன் டைமில் கிடைக்கும் வருமானம் மட்டும் சுமார் 230 கோடி ரூபாயாம்.
விநாயகரை முதன்மைக் கடவுளாகக் கொண்ட சித்தி விநாயகர் கோவிலின் ஓராண்டு வருமானம் சுமார் 125 கோடி ரூபாய். இங்கு அமைந்திருக்கும் விநாயகரின் சிலை 4 கிலோ தங்கத்தால் ஆனது.
ஒரு நாளைக்கு 20 முதல் 30 ஆயிரம் பக்தர்கள் மீனாட்சியம்மனை தரிசிக்க வருகை தருகின்றனர். மீனாட்சியம்மன் கோவில் சுமார் 6 கோடி ரூபாய் ஆண்டு வருமானம் வருகிறது.
கங்கை நதியின் மேற்கு கரையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவில், சிவ பெருமானின் 12 முக்கியக் கோவில்களில் ஒன்று. இதன் ஆண்டு வருமானம் சுமார் 6 கோடி ரூபாய். இதுவும் இந்தியாவின் பணக்கார கோவில்களில் ஒன்று
ஜகன்நாத் என்பது இந்துக்கடவுள் மகா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். முதன்மைக் கடவுளான ஜகன்நாதரின் பேரில் சுமார் 30,000 ஏக்கர் நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கோவில் ஆண்டு வருமானம் ரூ.150 கோடி
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust