கடும் தட்டுப்பாடு காரணமாக தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால், நுகர்வோர் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
சில்லறை விலை கிலோவுக்கு ₹80-120 ஆகவும், மொத்த விற்பனை விலை கிலோவுக்கு ₹65-70 ஆகவும் தக்காளி விற்பனை ஆகுவதாக தி எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
அதிக வெப்பநிலை, குறைந்த உற்பத்தி, நாடு முழுவதும் தவறிய பருவ மழை ஆகிய காரணங்களால் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
கடந்த இரண்டு நாட்களில் தக்காளி விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. அண்டை மாநிலங்களான ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்துள்ளது.
ஆண்டின் தொடக்கத்தில் தக்காளிக்கு சரியான விலை கிடைக்கவில்லை என்றும் இதனால் பல விவசாயிகள் தங்கள் வயல்களைக் கைவிட வேண்டியதாக இருந்தது என்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறியிருக்கிறார்.
தற்போது இருக்கும் விலை உயர்வு தொடர்ந்து இருக்காது. இமாச்சலப் பிரதேசம் மற்றும் பிற தக்காளி வளரும் பகுதிகளில் கனமழை பெய்தால், விலை இறங்கக் கூடும் என்றும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust