இந்தியாவின் டாப் 10 பணக்கார மாநிலங்கள் பட்டியல் வெளியீடு - தமிழ்நாட்டுக்கு என்ன இடம்?

இந்தியாவில் உள்ள முதல் பத்து பணக்கார மாநிலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
Top 10 Richest States of India
Top 10 Richest States of IndiaTwitter

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட மாநிலங்கள் உள்ளன.

அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு அளவிலான செழுமை மற்றும் பொருளாதாரத்தை கொண்டுள்ளது. அந்த வகையில், இந்தியாவில் உள்ள முதல் பத்து பணக்கார மாநிலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா

நாட்டின் பணக்கார மாநிலங்களில் முதலிடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. மகாராஷ்டிராவின் பொருளாதாரம் 2021-22 இல் ரூ.31.98 லட்சம் கோடியாக இருந்தது. அம்மாநிலத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 2021-22 இல் 10.4 சதவீதமாக இருந்தது.

தமிழ்நாடு

தமிழ்நாடு, இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மாநிலத்தின் பொருளாதாரம் உற்பத்தி, விவசாயம் மற்றும் சேவைத் தொழில்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி ரூ.24.85 லட்சம் கோடியாக உள்ளது

குஜராத்

2021-22ல் ரூ.22.03 லட்சம் கோடி மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியுடன் நாட்டின் மூன்றாவது பணக்கார மாநிலமாக குஜராத் உள்ளது.

ஜவுளி, ரசாயனங்கள், வைரம், நகைகள், உணவு பதப்படுத்துதல் மற்றும் பொறியியல் ஆகியவை மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு மிகவும் பங்களிக்கும் துறைகளாகும்.

Top 10 Richest States of India
குஜராத் : இரண்டாம் உலகப் போரால் லாபம் அடைந்த சூரத் - உலகின் வைர தலைநகராக வளர்ந்தது எப்படி?

உத்தரப்பிரதேசம்

மக்கள்தொகை அடிப்படையில் உத்தரப்பிரதேசம் நாட்டின் மிகப்பெரிய மாநிலமாக அறியப்படுகிறது. அம்மாநிலத்தின் பொருளாதாரம் ரூ.21.74 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் நான்காவது பணக்கார மாநிலமாக உத்தரப்பிரதேசம் உள்ளது.

கர்நாடகா

மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தில் ரூ.18.85 லட்சம் கோடியுடன் கர்நாடக மாநிலம் இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

அதேபோல், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் ரூ.17.13 லட்சம் கோடியுடன் மேற்குவங்கம் 6ஆவது இடத்திலும், ரூ.13.34 லட்சம் கோடியுடன் ராஜஸ்தான் 7ஆவது இடத்திலும், ரூ.13.04 லட்சம் கோடியுடன் தெலங்கானா 8ஆவது இடத்திலும், ரூ.12.01 லட்சம் கோடியுடன் ஆந்திரா 9ஆவது இடத்திலும், ரூ.11.5 லட்சம் கோடியுடன் மத்தியப்பிரதேசம் 10ஆவது இடத்திலும் உள்ளது.

Top 10 Richest States of India
இந்தியாவின் சிக்கலான கிராமம்: மகாராஷ்டிராவில் இருக்கும் கர்நாடக மக்களின் கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com