இரு சக்கர வாகன விற்பனை ஏப்ரல் 2022 ஆண்டு நல்ல முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது. முதல் 10 சிறந்த விற்பனையாளர்களின் விற்பனை மொத்தம் 8,54,056 யூனிட்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது கடந்த ஏப்ரல் 2021 ஆண்டு விற்கப்பட்ட 6,84,079 யூனிட்களை விட 24.85 சதவீதம் அதிகமாகும். அதாவது, மொத்தம் 1,69,977 யூனிட்கள் போன நிதியாண்டை விட இப்போது அதிகம்.
இந்த ஆண்டில் அதிகம் விற்பனையான இருசக்கர வாகனங்களில் பஜாஜ் பல்சர் மற்றும் சுஸுகி அக்சஸ் ஸ்கூட்டர் தவிர மற்ற 8 மாடல் இருசக்கர வாகனங்களும் கணிசமான வளர்ச்சி வீதத்தைக் கொண்டிருக்கிறது. இருசக்கர வாகன தேவை அதிகரித்திருப்பது, பொருளாதாரம் படிப்படியாக மாறுதல் , தொடர்ச்சியான அரசாங்க ஆதரவு மற்றும் வாடிக்கையாளர்களின் மனநிலை ஆகிய காரணங்களால் நிகழ்ந்துள்ளது.
இந்த டாப் 10 பட்டியலில் Hero Splendor முதலிடம் பிடித்திருக்கிறது. இந்த நிதியாண்டில் 2,34,085 யூனிட்களை விற்பனை செய்து பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. கடந்த ஏப்ரல் 2021-ல் விற்பனை செய்யப்பட்ட 1,93,508 யூனிட்களை விட 20.97 சதவீதம் அதிகரிகமாகும். சுமார் 40,577 யூனிட்கள் கடந்த ஆண்டை விட விற்பனையாகி இருக்கிறது. இதனால் ஹீரோ ஸ்பிளெண்டர் 27.41 சதவீத சந்தைப் பங்கைப் பெற்றுள்ளது.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது, ஹோண்டா ஆக்டிவா. 2022 ஏப்ரலில் ஹோண்டா ஆக்டிவா 1,63,357 யூனிட் விற்பனை செய்திருக்கிறது. இது ஏப்ரல் 2021-ல் விற்பனையான 1,09,678 யூனிட்களை விட 48.94 சதவீதம் மற்றும் 53,679 யூனிட் அதிகமாகும். ஹோண்டா ஆக்டிவா தற்போது 19.13 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது.
ஹோண்டா சிபி ஷைன் மூன்றாவது இடம் பிடித்திருக்கிறது. மொத்தம் 1,05,413 யூனிட்கள் விற்பனை செய்திருக்கிறது இந்த காலாண்டில். கடந்த ஏப்ரல் 2021-ல் விற்பனை செய்யப்பட்ட 79,416 யூனிட்களில் இருந்து 32.74 சதவீதம் வளர்ச்சியை ஹோண்டா சிபி ஷைன் கண்டிருக்கிறது. இது 25,997 யூனிட்களின் அளவு வளர்ச்சியாகும்.
1,00,601 யூனிட்களை விற்பனை செய்து நான்காவது இடத்தை ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பிடித்திருக்கிறது. இது ஏப்ரல் 2021-ல் விற்பனை செய்யப்பட்ட 71,294 யூனிட்களை விட 41.11 சதவீத வளர்ச்சியாகும். இதன் வளர்ச்சி 29,307 யூனிட்கள் மற்றும் சந்தைப் பங்கு 11.78 சதவீதமாக உள்ளது.
2021 ஏப்ரலில் விற்கப்பட்ட 25,570 யூனிட்களை விட, 138.39 சதவீத வளர்ச்சியுடன், இந்த ஆண்டு சுமார் 60,957 யூனிட் விற்பனை செய்து டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் 5வது இடத்தை பிடித்துள்ளது. சந்தை பங்கு 7.14 சதவீதமாக இருக்கிறது. டாப் 10 பட்டியலில் உள்ள மற்ற மாடல்களைக் காட்டிலும் ஜூபிடர் ஸ்கூட்டரின் தேவை இந்தாண்டு மிகவும் அதிகரித்திருக்கிறது.
இதேவேளையில் பஜாஜ் பல்சர் விற்பனை 46,040 யூனிட்களாக குறைந்துள்ளது. இது கடந்த ஏப்ரல் 2021-ல் விற்கப்பட்ட 66,586 யூனிட்களிலிருந்து 30.86 சதவீதம் குறைந்து 5.39 சதவீதமாக இருக்கிறது.. இருப்பினும், கடந்த ஆண்டில் 39,316 யூனிட்கள் விற்கப்பட்ட பிளாட்டினாவுக்கான தேவை அதிகரித்துள்ளதாக பஜாஜ் ஆட்டோ குறிப்பிட்டுள்ளது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 35,467 யூனிட்களை விட 10.85 சதவீதம் அதிகரித்து 3,849 யூனிட்கள் அளவு வளர்ச்சி கண்டுள்ளது. சந்தை பங்கு 4.60 சதவீதமாக இருந்தது. ஏப்ரல் 2022 இல் 38,780 யூனிட் விற்பனையுடன், TVS XL 100 இந்தப் பட்டியலில் 8வது இடத்தில் இருக்கிறது.
சுசுகி ஆக்செஸ் மற்றும் ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 ஆகியவை முறையே 9 மற்றும் 10-வது இடத்தில் இருக்கின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust