சாலையை சுத்தம் செய்யும் டிராஃபிக் போலீஸ் : வைரலாகும் வீடியோ - என்ன, எங்கே, ஏன்?

படு பிஸியாக வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சாலையில் டிராஃபிக் போலீஸ் ஒருவர் சுத்தம் செய்துகொண்டிருக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல், அந்த காவலரின் செயலை மெச்சி பாராட்டுகளும் குவிந்து வருகிறது
சாலையை சுத்தம் செய்யும் டிராஃபிக் போலீஸ்
சாலையை சுத்தம் செய்யும் டிராஃபிக் போலீஸ்NewsSense
Published on

நம் அன்றாட வாழ்கையில், பெரிதாக இல்லாவிட்டாலும், சிறிதளவு நம்மால் முடிந்த உதவியை செய்தாலே மனிதம் சாகாமலிருக்கும் என்பது பலரது கருத்து. அப்படி நாம் தன்னலமற்று செய்யும் சிறு சிறு செயல்களுக்கு, கிடைக்கும் பலன்கள் பலருக்கு நன்மை பயக்கும். நமக்கும் அது எதிர்பாராத விதத்தில் உதவி செய்யும்.

அந்த வகையில், இந்த போக்குவரத்து காவலரின் செயல், பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Cop clears pebbles on the road
Cop clears pebbles on the roadTwitter
சாலையை சுத்தம் செய்யும் டிராஃபிக் போலீஸ்
சாலையில் அடிபட்ட பறவையை காப்பாற்ற சென்ற தொழிலதிபர் மற்றும் டிரைவர் பலி - வீடியோ வைரல்

காலை நேர போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதே பெரும் பாடாக இருக்கும்போது, நம்ம ஊர் சாலைகள் அதற்கு எவ்வளவு கைகொடுக்கும் என்று நம் எல்லோருக்கும் தெரியும்.

அப்படி சாலையில் கொட்டி கிடந்த சிறிய கற்களை போக்குவரத்து காவலர் அப்புறப்படுத்தும் காட்சி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

காவலர் ஒரு சீமாரை வைத்து அந்த கற்களை அகற்ற, பின்னிருந்து வேறொருவர் காவலரை வாகன ஓட்டிகள் இடித்துவிடாதபடி போக்குவரத்தை கண்காணிக்கிறார். மேலும், வாகனம் ஓட்டுபவர்களை மெதுவாக செல்லுமாறும் அவர் சைகை செய்யும் காட்சியும் அந்த காணொலியில் பதிவாகியுள்ளது.


இதை தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஐ ஏ எஸ் அதிகாரி அவனிஷ் சரண் "Respect For You" என்ற தலைப்போடு பகிர்ந்திருந்தார். இந்த வீடியோவிற்கு 1.2 மில்லியன் வியூக்களும், 70 ஆயிரத்துக்கு மேல் லைக்குகளும் வந்து குவிந்துள்ளன.

Traffic Cop(representational)
Traffic Cop(representational)Pexels

"கடமையை விட மனிதம் தான் முக்கியம் என்று இந்த செயல் காட்டுகிறது" என்றொரு பயனர் பதிவு செய்திருந்தார். இந்த வீடியோவை பார்த்த பலரும் அந்த காவலருக்கு வாழ்த்தும் வணக்கங்களும் கூறி வருகின்றனர்.


இதற்கு முன்வு கல்கத்தாவில் ஒரு காவல்துறை அதிகாரி, ஒரு சிறுவனுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும் புகைப்படம் வைரலானது குறிப்பிடத்தக்கது

சாலையை சுத்தம் செய்யும் டிராஃபிக் போலீஸ்
சென்னை: சாலையோரத்தில் வசிக்கும் மாணவிக்கு ஆசிரியரான போக்குவரத்து காவலர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com