ஒரே நம்பர் பிளேட், இரு வேறு வாகனங்கள்...குழப்பத்தால் மாட்டி கொள்ளும் சார்டட் அகவுன்டன்ட்

அந்த பெயர் தெரியாத நபர், இவ்வாறு போக்குவரத்து விதிமீறலில் அடிக்கடி ஈடுபடுபவராக தெரிகிறது. இதனால், அவர் செய்யும் குற்றங்களுக்கு, அபராதம் சுசித்துக்கு வந்து சேருகிறது.
Mystery Man
Mystery ManTwitter
Published on

தன் வாகனத்தின் நம்பர் பிளேட்டில் இருக்கும் எண்ணையே, மற்றொரு நபரும் வைத்துள்ளதால், தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறார் மும்பையை சேர்ந்த சார்டட் அக்கவுன்டன்ட் ஒருவர்.

மக்களின் பாதுகாப்பை ஒட்டி அரசு, ஹெல்மட் அணிதல், சீட் பெல்ட் அணிந்துகொள்வது, அதி வேகமாக வாகனம் ஓட்ட தடை என பல விதிகளை வகுத்துள்ளது. இவற்றை பின்பற்றாத போது அது போக்குவரத்து விதிமீறலாக பார்க்கப்படுகிறது.

வாகனம் ஓட்டும்போது சில சமயங்களில் போக்குவரத்து விதிமீறல்கள் நடக்கும். சிலர் வேண்டுமென்றும் கூட இதை செய்வார்கள்.

முன்பெல்லாம் போக்குவரத்து காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு அபராதம் செலுத்தும் வழக்கம் இருந்தது. ஆனால், அவர்களை ஏமாற்றிவிட்டு வாகன ஓட்டிகள் தப்பிச்செல்வதால், தொழில்நுட்பங்களின் உதவியோடு, விதிமீறலில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க தானியங்கி முறைகள் வந்துவிட்டன.

இந்த போக்குவரத்து விதிமீறலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார் மும்பையை சேர்ந்த சார்டட் அக்கவுன்டன்ட் சுசித் ஷா என்பவர். சுசித் ஷாவின் கார் நம்பர் பிளேட்டில் இருக்கும் அதே நம்பரை தனது இருசக்கர வாகனத்திற்கு மாற்றியுள்ளார் அதே ஊரை சேர்ந்த இன்னொருவர்.

அந்த பெயர் தெரியாத நபர், இவ்வாறு போக்குவரத்து விதிமீறலில் அடிக்கடி ஈடுபடுபவராக தெரிகிறது. இதனால், அவர் செய்யும் குற்றங்களுக்கு, அபராதம் சுசித்துக்கு வந்து சேருகிறது.

சுசித்தின் நம்பர் பிளேட்: MH 02 FJ 0759. அந்த மர்ம நபரின் இருசக்கர வாகனத்தின் நம்பர் MH 02 EJ 0759. இந்த E என்ற எழுத்தை தந்திரமாக F போல காட்சியளிக்கும்படி மாற்றிவிட்டார் மர்ம நபர். இதனால் அபராத சலான்கள் சுசித்தின் கணக்கில் வருகிறது.

இது குறித்து பல முறை புகாரளித்துள்ளார் சுசித். அதிகாரிகள் தரப்பில் இந்த பிரச்னைக்கு அவர்கள் பதிலளித்தாலும், அந்த மர்ம நபர் தொடர்ந்து விதிகளை மீறி வருவதால், வரும் சலான்கள் குறித்து புகாரளிப்பது ஒரு அன்றாட வேலையாக மாறிவிட்டது எனக் கூறுகிறார் சுசித்.

ஆனால் அந்த மர்ம நபர் இன்னும் பிடிப்படமால் தப்பித்துக்கொண்டிருக்கிறார் என்பது வேடிக்கையான உண்மை

Mystery Man
Anti Clockwise திசையில் நடக்கக் கூடாது - பெங்களூர் பார்க்கின் அறிவிப்பு பலகையால் குழப்பம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com