Indian Railways: டிக்கெட் கேன்சல் செய்வதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய IRCTC விதிகள்

பயண டிக்கெட்டுகளை ஏதோ ஒரு காரணத்திற்காக கேன்சல் செய்கிறோம். அப்படி பயணிகள் ரயிலைத் தவறவிட்டாலோ அல்லது பயணிகளின் சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு டிக்கெட்டை ரத்து செய்தாலோ எப்படி முழு பணத்தை பெறுவது என்று தெரிந்துக்கொள்ளலாம்.
Indian Railways: டிக்கெட் கேன்சல் செய்வதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய விதிகள்
Indian Railways: டிக்கெட் கேன்சல் செய்வதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய விதிகள்Twitter
Published on

177 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்திய ரயில்வே, உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியாவில் ரயில் சேவை மக்களுக்கு மிகவும் பொதுவான மற்றும் சிக்கனமான போக்குவரத்து வழிமுறையாகும்.

தினசரி, இந்தியாவில் சுமார் 23 மில்லியன் பயணிகள் ரயிலில் பயணிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய ரயில்வே வகுத்துள்ள சில முக்கியமான விதிகளைப் பற்றி ஒவ்வொரு பயணியும் தெரிந்து கொள்வது அவசியம். அந்த வகையில் பயண டிக்கெட்டுகளை ஏதோ ஒரு காரணத்திற்காக கேன்சல் செய்கிறோம். அப்படி பயணிகள் ரயிலைத் தவறவிட்டாலோ அல்லது பயணிகளின் சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு டிக்கெட்டை ரத்து செய்தாலோ எப்படி முழு பணத்தை பெறுவது என்று தெரிந்துக்கொள்ளலாம்.

டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டிய நபர்கள் ஐஆர்சிடிசி போர்ட்டலில் ஆன்லைன் மூலம் டிக்கெட் டெபாசிட் ரசீதை தாக்கல் செய்ய வேண்டும்

வாடிக்கையாளர்கள் முன்பதிவு குறித்த விவரங்கள் சரி பார்த்த பிறகு பணம் செலுத்திய வாடிக்கையாளரின் வங்க கணக்கில் 5 நாட்களுக்குள் பணம் திருப்பி தரப்படும்.

பணத்தை திரும்பி பெற TDR ஐ ஆன்லைனில் தாக்கல் செய்வது எப்படி என்பதை தற்போது பார்க்கலாம்

  • ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

  • Menu-வை கிளிக் செய்து, Service-ஐ தேர்வு செய்யவும்.

  • History option விருப்பத்தைப் பார்வையிடவும், Transitions என்பதை தேர்ந்தெடுக்கவும்.

  • அடுத்து, இணையதளம் TDR ஐப் பதிவு செய்ய கடவுச்சொல் சரிபார்ப்பைக் கேட்கும்

  • இறுதியாக, பயனர் TDR தாக்கல் செய்ய வேண்டும்

Indian Railways: டிக்கெட் கேன்சல் செய்வதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய விதிகள்
Indian Railways: ரயிலில் பயணிக்கும் முன் பயணிகள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விதிகள்

உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டுகள் ரத்து செய்தால் அதற்கான கட்டணங்கள் அந்த டிக்கெட்டின் வகுப்பு மற்றும் ரத்து செய்யப்பட்ட நேரத்தின் அடிப்படையில் மாறுபடும்.

ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரம் முதல் 12 மணிநேரங்களுக்குள் ரத்து செய்யப்பட்டால் டிக்கெட் கட்டணத்தில் 25% முதல் 50% வரை கட்டணம் வசூலிக்கப்படும்.

இதில் ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு டிக்கெட் ரத்து செய்யப்படாவிட்டாலோ அல்லது ஆன்லைனில் TDR தாக்கல் செய்யாவிட்டாலோ, முன்பதிவு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளில் கட்டணம் திரும்பப் பெறப்படாது என்பது IRTC விதிமுறையாகும்.

Indian Railways: டிக்கெட் கேன்சல் செய்வதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய விதிகள்
Indian Railways: இந்தியாவின் மிக முக்கியமான ரயில்கள் என்னென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com