சென்னை To பெங்களூரு விமானத்திற்கு வெறும் ரூ.900 தானா? என்னவா இருக்கும்?

சென்னை டூ பெங்களூரு வழித்தடத்தில் உள்ள விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனை ஈடுகட்டும் வகையிலும் பயணிகளை ஈர்க்கும் வகையிலும் பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் சலுகை விலையில் டிக்கெட்களை வழங்க முடிவு செய்துள்ளன.
Travel : Airlines offer discount chennai to Bengaluru with just rs 900
Travel : Airlines offer discount chennai to Bengaluru with just rs 900Twitter
Published on

சென்னை டூ பெங்களூருவிற்கு விமான டிக்கெட்டின் விலை பாதிக்கும் குறைவாக 900 முதல் 2,000 ரூபாய் வரை விற்பனைக்கு வந்துள்ளன.

விமான பயணம் என்றாலே அதில் சாதாரண மக்கள் பயணிக்க முடியாது, ரொம்பவே காஸ்ட்லியாக இருக்கும் என்று தானே எண்ணுவோம், ஆனால் இங்கு விமான டிக்கெட்களின் விலையில் அதிரடியான ஆஃபர்களை கொடுத்து வருகின்றனர்.

கடந்த வாரங்களில் விமான டிக்கெட்டின் விலை அதிரடியாக குறைந்திருக்கிறது.

உதாரணமாக சென்னை டூ பெங்களூருவிற்கு விமான பயணத்தின் விலை பாதிக்கும் குறைவாக 900 முதல் 2,000 ரூபாய் வரை விற்பனைக்கு வந்துள்ளன.

இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது ரயில் சேவை தான், என்ன குழப்பமாக இருக்கிறதா?

சென்னையில் இருந்து பெங்களூருவிற்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் செல்ல 4.25 மணி நேரம் ஆகிறது. இதில் ஏசி சேர் கார் கட்டணமாக 995 ரூபாயும், எக்ஸிக்யூடிவ் சேர் கார் கட்டணமாக 1,885 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

கிட்டதட்ட விமானத்தில் இருப்பது போன்ற வசதிகள் கிடைப்பதாக கூறப்படுகிறது. விமானம் போன்ற சேவையை ரயில் சேவையிலேயே கொடுத்தால் யாருக்கு தான் புடிக்காமல் போகும். இதனால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீதான மோகம் பெரிதும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

Travel : Airlines offer discount chennai to Bengaluru with just rs 900
10 நிமிடம் லேட்! 335 பேரோடு பறந்து வந்த விமானத்தை திருப்பி அனுப்பிய விமான நிலையம் - ஏன்?

இந்நிலையில் சென்னை டூ பெங்களூரு வழித்தடத்தில் உள்ள விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனை ஈடுகட்டும் வகையிலும் பயணிகளை ஈர்க்கும் வகையிலும் பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் சலுகை விலையில் டிக்கெட்களை வழங்க முடிவு செய்துள்ளன.

இந்த முடிவிற்கு வேறு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன.

அதாவது விமான எரிபொருள் விலை சரிவு, ஆகாஷா ஏர் (Akasa Air) போன்ற குறைந்த டிக்கெட் விலை கொண்ட விமானங்களில் இருக்கைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, ஐடி துறையின் வீழ்ச்சி ஆகியவை சேர்ந்து இந்த அதிரடி முடிவுகளை எடுக்க காரணமாக அமைந்துள்ளன.

Travel : Airlines offer discount chennai to Bengaluru with just rs 900
Travel: துபாய் முதல் டென்வர் வரை - உலகின் மிக அழகான விமான நிலையங்கள்

எனவே பயணிகளை கவர 1,000 ரூபாய் வரை தங்களது டிக்கெட் விலையை குறைக்க முடிவு செய்துள்ளன. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் சிலர் கூறுகையில்,

பெங்களூரு வரை செல்லும் போது பல இருக்கைகள் காலியாக காணப்படுகின்றன. இதுபோன்ற சிக்கலை தவிர்க்க தற்போதைக்கு டிக்கெட் விலையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. விமான டிக்கெட் சலுகை என்பது சென்னை டூ பெங்களூரு வழித்தடத்திற்கு மட்டுமே பொருந்தும் என்றும், மற்ற வழித்தடங்களில் வழக்கம் போல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Travel : Airlines offer discount chennai to Bengaluru with just rs 900
உலகின் மிக விரைவான விமான பயணம் - பயணக் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com