உப்பங்கழிகள் தேங்கு நீர். இந்த தண்ணீரில் ஓட்டம் இருக்காது. ஆனால் இந்த நீர்நிலையை போக்குவரத்துக்காகவும், மீன் பிடிக்கவும், விவசாயத்திற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
Backwaters என்றவுடன் பொறிதட்டுவது கேரளா தான். இவை கேரளாவின் சுற்றுலா அம்சங்களில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன
கேரளாவிலுள்ள சில முக்கியத்துவம் வாய்ந்த, வரலாற்று சிறப்புமிக்க பேக் வாட்டர் ஸ்பாட்ஸ்களை இங்கு காணலாம்.
கிழக்கின் வெனிஸ் என்றழைக்கப்படுகிறது ஆலப்புழா. ஆலப்புழா உப்பங்கழிகள் முதன்மையான நீர்நிலைகள். இங்கு நம் பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு ஹவுஸ்போட்களை தேர்வு செய்து, சுற்றிப்பார்க்கலாம்.
இந்த படகுகளில் பயணிக்கும்போது ரம்மியமான இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டே செல்லலாம். இதில் பயணித்துக்கொண்டே சூரியன் அஸ்தமனத்தை கண்டு ரசிக்கலாம்.
தவிர இங்கு ஹோம்ஸ்டேக்களும் உண்டு. அதாவது, இந்த உப்பங்கழிகளுக்கு அருகில் தங்க பீச் ஹவுஸ் போன்ற ரிசார்ட்டுகள் இருக்கும். அங்கு நாம் தங்கிக்கொள்ளலாம்.
கொச்சி விமான நிலையத்திலிருந்தும், ஆலப்புழா ரயில் நிலையத்திலிருந்தும் இங்கு எளிதாக செல்லலாம்.
வேம்பநாடு ஏரி நீர்தேக்கத்தில் கலக்கும் தண்ணீர் இந்த குமரகோம் உப்பங்கழிகள். இங்கு birdwatching செய்யலாம், பசுமையான வயல்கள், உயரமான தென்னை மரங்கள் சூழ்ந்த ஒரு அழகிய அமைதியான சுற்றுச் சூழலை அனுபவிக்கலாம்.
இந்த நீர்நிலையில், பாம்பு படகு பந்தையம், பாரம்பரிய படகுபோட்டிகள் நடத்தப்படும். அதனையும் கண்டு ரசிக்கலாம்
கோழிக்கோடு இந்தியாவின் முக்கிய வணிக நகரங்களில் ஒன்று. இது அரபுகளின் மத்திய வணிகத் தலமாக இருந்தது. கேரளாவின் பிரதான உப்பங்கழிகளில் ஒன்று இந்த கோழிக்கோடு பேக்வாட்டர்ஸ்.
கனோலி மற்றும் கல்லை நதிகளின் ஊடே இங்கிருந்து படகு சவாரி செய்யலாம். இங்கிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் கடலுண்டி பறவைகள் சரணாலயம் இருக்கிறது. பறவை பிரியர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய தலங்களில் இது ஒன்று.
அஷ்டமுடி ஏரிக்கரையில் இருக்கிறது கொல்லம் உப்பங்கழிகள். இங்கு சீன மீன்பிடி வலைகள் மிகவும் பிரபலம். கொல்லம் பேக்வாட்டர்களில் பயணிக்கும்போது முன்ரோ தீவு, சாவரா தீவு மற்றும் தெக்கும்பாகம் தீவு ஆகியவற்றை காணலாம்.
இங்கு தனித்துவமான பறவை இனங்களை காணலாம் மற்றும் முந்திரி தொழில்களின் மையமாக இருக்கிறது.
கேரளா கர்நாடகா எல்லையில் அமைந்திருக்கும் இந்த நகரத்தின் பேக் வாட்டர்கள் அவ்வளவு பிரபலமானது அல்ல தான், ஆனால் இதன் வழியே செல்லும்போது வரலாற்று சிறப்புமிக்க கோட்டைகள், நான்கு அழகிய சிறிய தீவுகளை கண்டு ரசிக்கலாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust