சென்னை டூ சிக்மகளூர் : இந்த தீபாவளி லீவுக்கு பட்ஜெட் ட்ரிப் செல்ல தயாரா?

சென்னையில் இருந்து மாமல்லபுரம், மெரினா கடற்கரை இவற்றையே பார்த்து சலித்தவர்களுக்கு ட்ரெக்கிங், கேம்பிங், இயற்கையோடு ஒரு பயணம் என கர்நாடகாவின் சிக்மங்களூரு செல்லலாம்.
சென்னை டூ சிக்மகளூர் : 
இந்த தீபாவளி லீவுக்கு பட்ஜெட் ட்ரிப் செல்ல தயாரா?
சென்னை டூ சிக்மகளூர் : இந்த தீபாவளி லீவுக்கு பட்ஜெட் ட்ரிப் செல்ல தயாரா?Twitter

இந்த தீபாவளி லீவுக்கு சென்னையில் இருந்து மற்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள், ஆனால் சென்னையையே சொந்த ஊராக வைத்திருப்பவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானது.

சென்னையில் இருந்து பக்கத்தில் இருக்கும் மாமல்லபுரம், ஏற்காடு என சென்றிருப்போம், ஆனால் இன்று நாம் ஒரு புதுமையான இடத்தை பற்றி சொல்ல போகிறோம்,

ட்ரெக்கிங், கேம்பிங், இயற்கையோடு ஒரு பயணம் என கர்நாடகாவின் சிக்மங்களூரு பற்றி தான் விரிவாக தெரிந்துக்கொள்ள போகிறோம்.

கர்நாடகா அமைந்துள்ள சிக்மகளூர், பார்ப்பதற்கு மிகவும் அமைதியான இடங்களில் ஒன்றாகும். நீண்ட வாரயிறுதியில், இந்த இடத்திற்குச் சென்றால் தனித்துவமான அனுபவத்தை பெறலாம். சிக்மகளூர் காபி நிலம் என்றும் அழைக்கப்படுகிறது. நீங்கள் காபி பிரியர்களாக இருந்தால், இங்குள்ள பல்வேறு காபி எஸ்டேட்டுகளுக்குச் செல்லலாம். சென்னையில் இருந்து சிக்மகளூரை எப்படி அடையலாம்?

சென்னையிலிருந்து கிட்டத்தட்ட 596 கி.மீ தொலைவில் இருக்கும் சிக்மகளூருக்கு இங்கிருந்து நேரடியாக பேருந்துகள் கிடையாது. ஆனால் பெங்களூரு செல்ல தினசரி பேருந்துகள் உள்ளன. அதில் பெங்களூரு வரை சென்று அங்கிருந்து சிக்மங்களூரு செல்லலாம். சென்னையிலிருந்து பெங்களூருக்கு தமிழக அரசு பேருந்துகள் உள்ளன.

பேருந்து வேண்டாம் என்று நினைத்தால் சென்னை, கோவை போன்ற நகரங்கள் வழியாக தினமும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து பெங்களூருவிற்கு செல்ல ரயில் கட்டணம் ரூ.140 இல் இருந்து தொடங்குகிறது. பேருந்து கட்டணம் 440 இல் இருந்து தொடங்குகிறது.

நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள்

பத்ரா வனவிலங்கு சரணாலயம்

429 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து இருக்கும் பத்ரா வனவிலங்கு சரணாலயம் 120 க்கும் மேற்பட்ட மரங்கள், 56 அயல்நாட்டு வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் 300 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

மலபார் கிளிகள், சிறுத்தைகள், முதலைகள் என பலவற்றை நீங்கள் காணலாம். தொலைநோக்கியை எடுத்துச் செல்ல மறக்காதீர்கள். நுழைவுக் கட்டணங்கள் எதுவும் இல்லை, ஆனால் ஜீப் சஃபாரிக்கான கட்டணம் உள்ளது. இந்திய குடிமக்களுக்கு ரூ.400, வெளிநாட்டினருக்கு 1,200 ரூபாயாகும். பஸ் சஃபாரிக்கு ஒரு நபருக்கு சுமார் 300 ரூபாய் செலவாகும்.

ஹெப்பே நீர்வீழ்ச்சிகள்

அழகிய கெம்மனகுண்டி மலைகளுக்கு மத்தியில் 168 மீட்டர் உயரமுள்ள ஹெப்பே நீர்வீழ்ச்சி சிக்மகளூரில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் ஒன்றாகும். இது சிறிய மலையேற்றத்தால் சூழப்பட்டுள்ளது. இந்த அருவியில் மருத்துவ குணம் கொண்ட வெளிநாட்டு மூலிகைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அருவிக்கு நுழைவு கட்டணம் கிடையாது.

முல்லையனகிரி சிகரம்

சிக்மகளூரின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று முல்லையனகிரி சிகரம். இங்குள்ள வானிலை மற்றும் வெப்பநிலை இனிமையாக இருக்கும். சிகரத்தின் உச்சியை அடைய நீங்கள் மலையேற வேண்டும். காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நீங்கள் சிகரத்தை பார்வையிடலாம்.

காபி எஸ்டேட் சுற்றுப்பயணம்

காபிக்கு பெயர் பெற்ற சிக்மகளூர், இந்தியாவில் காபி பயிரிடப்பட்ட முதல் இடமாகும். அந்த பகுதியை சுற்றிலும் காபியின் நறுமணம் நிரம்பியிருக்கும். இந்த எஸ்டேட்டுகளுக்கு நீங்கள் ஒரு சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம்,

ஹொரநாடு கோவில்

சிக்மகளூரில் உள்ள ஹொரநாடு கோயில் அன்னபூர்ணேஸ்வரி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயில், கம்பீரமான கட்டிடக்கலையை கொண்டுள்ளது.

சென்னை டூ சிக்மகளூர் : 
இந்த தீபாவளி லீவுக்கு பட்ஜெட் ட்ரிப் செல்ல தயாரா?
சென்னை to சவுதி அரேபியா: கண்டம் விட்டு கண்டம் பைக்கில் செல்லும் பெண் - வாவ் ஸ்டோரி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com