சென்னையைச் சேர்ந்த ரேஷ்மா காசிம் நூர் தனது கிளாசிக் 350 பைக்கில் இந்தியா முழுவதும் 9000 கிமீ பயணம் செய்துள்ளார். தற்போது தனது பைக்கில் சவுதி அரேபியா பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
ஒரு பயணத்தை மேற்கொள்ளப் பல வழிகள் உண்டு. சாலை, கடல், வான் என எப்படி வேண்டுமானாலும் செல்லலாம்.
சுதந்திர பறவையாகப் பறக்க ஒரு பைக் பயணம் தான் சரி என்று சொல்பவர்களும் உண்டு. அப்படி இந்தியா முழுக்க பைக் பயணம் சென்று வருகிறார் ரேஷ்மா என்ற பெண்மணி.
அவரது பயணம் பெங்களூரில் தொடங்கியது. இந்த பரபரப்பு நகரத்திலிருந்து மகாராஷ்டிரா, குஜராத், பீகார், டெல்லி, உத்தரபிரதேசம் என பல இடங்களுக்கு சென்றிருக்கிறார். ஒவ்வொரு ஊரிலும் அதன் கலாச்சாரம் , உணவு எல்லாவற்றையும் அனுபவித்து தனது பயணத்தை தொடர்கிறார் ரேஷ்மா.
மோட்டார் சைக்கிளில் 9,000 கி.மீ கடந்திருக்கும் அவர், இது வெறும் பயணம் மட்டுமல்ல, அனுபவம் என்கிறார்.
அவர் டீலக்ஸ் ஹோட்டல்களிலோ அல்லது விடுதிகளிலோ தங்கவில்லை, மாறாக இரவு வானத்தின் கீழ் வசதியான கூடாரங்கள் அமைத்தும், உள்ளூர்வாசிகளின் வீடுகளிலும் தங்கிருக்கிறார்.
சில நேரங்களில் பெட்ரோல் பங்க்களில் கூட ஓய்வெடுப்பாராம். அவரது பயணத்தின் நோக்கமே பிற பெண்களின் சுதந்திரத்தை ஊக்குவிப்பது என்கிறார்.
அடுத்ததாக சென்னையில் இருந்து சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் ரேஷ்மா.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust