Twitter நிறுவனத்தில் தொடரும் lay off - இந்திய ஊழியர்களை மொத்தமாக நீக்கியது ஏன்?

டிவிட்டர் நிறுவனம் முறையாக எந்த ஒரு நோட்டீஸையும் கொடுக்காமல், பெரிய அளவில் ஊழியர்களை லே ஆஃப் செய்து வருகிறார்கள், இது சட்டத்தின் படி தவறு என நீதிமன்றத்தில், டிவிட்டர் நிறுவனத்துக்கு எதிராக அதன் ஊழியர்கள் ஒரு வழக்கையும் தாக்கல் செய்துள்ளனர்.
எலான் மஸ்க்
எலான் மஸ்க்Twitter
Published on

சில வாரங்களுக்கு முன்பு, டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிவிட்டு, ட்விட்டர் அலுவலகத்துக்கு ஒரு சிங்கோடு நுழைந்தார். அப்போதே மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் எல்லாம் இருக்கும் எனக் கூறப்பட்டது.

எலான் மஸ்கும் டிவிட்டரின் செலவுகளைக் குறைக்க சுமார் 75 சதவீத ஆட்களை லே ஆஃப் செய்யவிருப்பதாக 'தி வெர்ஜ்' பத்திரிகையில் செய்தி வெளியாகி இருந்தது.

அதே போல ஒட்டுமொத்த ட்விட்டர் நிறுவனத்தின் செலவினங்களில் சுமார் 1 பில்லியின் அமெரிக்க டாலர் வரை மிச்சப்படுத்தும் வழியைத் தேடுமாறும் எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளதாக ராய்டர்ஸ் முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

டிவிட்டரின் முதன்மைச் செயல் அதிகாரியாக இருந்த பராக் அகர்வால் முதல் தன் லே ஆஃப் பணிகளைத் தொடங்கினார் எலான் மஸ்க்.

தற்போது இந்தியாவில் உள்ள டிவிட்டர் அணிகளிலும் லே ஆஃப் பணிகள் நடந்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவிலிருந்து செயல்படும் டிவிட்டர் அலுவலகத்தில் உள்ள பொறியியல் பிரிவு, கம்யூனிகேஷன் பிரிவு முதல் மார்க்கெட்டிங் பிரிவு வரை அனைத்துப் பிரிவிலும் லே ஆஃப் செய்திருப்பதாக என் டி டிவி வலைதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்த மார்க்கெட்டிங் அணியும் வெளியேற்றப்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

எலான் மஸ்க்
SRM to Twitter : எலான் மஸ்குக்கு துணையாக ஒரு சென்னைவாசி- யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்?

இதுவரை எத்தனை பேர் லே ஆஃப் செய்யப்பட்டு இருக்கிறார்கள், எந்த எந்த பிரிவுகள் முழுமையாக மூடப்பட்டன என்கிற தெளிவான விவரங்கள் டிவிட்டர் தரப்பிலிருந்து வெளியாகவில்லை. ஆனால் இந்தியாவில் உள்ள டிவிட்டர் அலுவலகத்தில் சுமார் 200 பேர் பணியிலிருந்து நீக்கப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பல்வேறு ஊடகங்களும் டிவிட்டர் இந்தியாவிடம் இது குறித்து கருத்து கேட்ட போதும், அவர்களிடமிருந்து எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Twitter
TwitterCanva

பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் டிவிட்டர் அலுவலகங்கள் வெள்ளிக்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டு இருப்பதாகவும், டிவிட்டரில் பணிபுரிபவர்களில், யாரெல்லாம் லே ஆஃப் செய்யப்படவில்லையோ, அவர்களுக்கு அலுவலக மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தப்படும் என்றும், லே ஆஃப் செய்யப்பட்டால் அவர்களுக்கு தங்களின் சொந்த மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் என டிவிட்டர் நிறுவன தரப்பில் கூறப்பட்டது.

அலுவலகங்களைத் தற்காலிகமாக மூடுவதைத் தொடர்ந்து, பல ஊழியர்களுக்கு டிவிட்டரின் முக்கிய தரவுகளை அணுகுவதற்கான அனுமதியையும் தற்காலிகமாக முடக்கியுள்ளது டிவிட்டர்.

Twitter
TwitterNews Sense

வாடிக்கையாளர்களின் தரவுகள் பாதுகாப்பு மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கூறுகிறது டிவிட்டர்.

இதற்கிடையில், டிவிட்டர் நிறுவனம் முறையாக எந்த ஒரு நோட்டீஸையும் கொடுக்காமல், பெரிய அளவில் ஊழியர்களை லே ஆஃப் செய்து வருகிறார்கள், இது அமெரிக்க மத்திய மற்றும் கலிஃபோர்னிய சட்டத்தின் படி தவறு என அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாண நீதிமன்றத்தில், டிவிட்டர் நிறுவனத்துக்கு எதிராக அதன் ஊழியர்கள் ஒரு வழக்கையும் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கினால் ஒரு பகுதி ஊழியர்களுக்காவது ஜனவரி 4ஆம் தேதி வரை சம்பளம் கிடைக்கலாம் என அவ்வழக்கைத் தொடுத்த அட்டர்னி ஷனான் லிஸ் ரியோர்டன் ப்ளூம்பர்கிடம் கூறினார்.

எலான் மஸ்க்
Twitter Blue Tick பெறுவதற்கு கட்டணம்- ஸ்டீவ் ஜாப்ஸ் பாணியில் செயல்படும் எலான் மஸ்க்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com