பல்கலைக்கழக மானியக்குழு -வின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு தற்போது மீண்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்படுவது இது மூன்றாவது முறை.
நேற்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து உத்திர பிரதேச முதல்வரின் கணக்கு ஹேக் செய்யப்பட்டது.
ஹேக் செய்த மர்ம நபர்கள் ட்விட்டர் கணக்கின் புரொஃபைல் புகைப்படத்தை அனிமேஷன் படங்களாக மாற்றுகின்றனர். உலகெங்கிலுமிருந்து பல நபர்களை டேக் செய்து ட்விட் செய்து வருகின்றனர்.
யுஜிசி அதிகாரப்பூர்வ கணக்கு 2லட்சத்து 96 ஆயிரம் ஃபாளோவர்களைக் கொண்டுள்ளது. அத்துடன் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஹேக்கர்கள் யார் அவர்களின் நோக்கம் என்ன? என்பது இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
ஹேக்கர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என உத்திரபிரதேச அரசு கூறியுள்ளது. சைபர் க்ரைம் காவலர் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.