"தமிழகத்தை மூன்றாக பிரித்தால் ஏற்க முடியுமா?" - ஸ்டாலின் முன் உமர் அப்துல்லா வேதனை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்-ன் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமரின் பேச்சு இணையத்தில் பரவலாகப் பேசப்பட்டது.
விழாவில் உமர் அப்துல்லா

விழாவில் உமர் அப்துல்லா

Twitter

Published on

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்-ன் தன் வாழ்க்கைக் குறிப்பு புத்தகமான “உங்களில் ஒருவன்” புத்தக வெளியீடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர் ராகுல் காந்தி புத்தகத்தை வெளியிட்டார். விழாவிற்கு திமுக பொது செயலாளர் துரை முருகன் தலைமை தாங்கினார்.


விழாவில், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் மற்றும் தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்துக் கொண்டனர்.

விழாவில் பேசிய ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமரின் பேச்சு இணையத்தில் பரவலாகப் பேசப்பட்டது. அவர் பேசியதாவது:-

“`எப்படி இருக்க வேண்டும். எதை சாப்பிட வேண்டும். எந்த உடை அணிய வேண்டும் என்பது பற்றி முடிவெடுப்பது அவரவரின் உரிமை. இந்துவாக காவித் துண்டு போட வேண்டுமா? பொட்டு வைக்க வேண்டுமா? அல்லது இஸ்லாமியராக ஹிஜாப் அணிய வேண்டுமா, தாடி வைக்க வேண்டுமா என்பதைப் பற்றி அவரவர்தான் முடிவு செய்ய வேண்டும். மத அடையாளங்களைப் பின்பற்றுவது தனிமனித உரிமை. ஆனால், தற்போது மொழி, மதம், ஆடை, உணவு சுதந்திரம் என்பது கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது. இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை நிறைந்த நாடு. மாநில அரசுகள் மத்திய அரசுக்கு கட்டுப்பட்டவை என்ற கருத்து உருவாக்கப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் மக்களின் குரலை கேட்காமல் மாநிலம் பிரிக்கப்பட்டது. காஷ்மீருக்கு வந்த நிலை தமிழ்நாட்டுக்கோ, கேரளாவுக்கோ வராது என்பது என்ன நிச்சயம்? மக்களின் ஒப்புதல் இல்லாமல் ஜம்மு காஷ்மீரை பிரித்தனர். பல தலைமுறைகளை கடந்த சொந்தம் ஜம்மு காஷ்மீருக்கும் தமிழகத்திற்கும் இருக்கிறது. ஒரு ஆளுநர் தமிழகத்தை மூன்றாக பிரித்தல் ஏற்க முடியுமா?" எனத் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>விழாவில் உமர் அப்துல்லா</p></div>
Rahul Gandhi : 'நான் தமிழன், என் ரத்தம் இங்கே கலந்திருக்கிறது'- ராகுல் நெகிழ்ச்சி

விழாவில், ஜம்மு- காஷ்மீரின் பாரம்பரிய தரைவிரிப்பை (கார்ப்பெட்) தமிழக முதலமைச்சருக்குப் பரிசாக வழங்கினார் உமர் அப்துல்லா.

அதைத் தொடர்ந்து பேசிய கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், "கூட்டாட்சிக்கு ஆபத்து வரும் போது, முதல் நபராக நிற்பவர் மு.க.ஸ்டாலின். மாநில உரிமைகளை மீட்பதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு முக்கியமானது. படிப்படியாக வளர்ந்து இந்த உயரத்தை அடைந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உங்களில் ஒருவன் தமிழ்ச் சமூக வரலாற்றையும் சொல்கிறது"

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com