பலகையைப் பார்க்காமல் இரு கைகளாலும் வரையும் ஓவியர் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

பள்ளிக்கூட வகுப்பறையின் போர்டில் வரையும் இவர் கேமராவை பார்த்தபடி அமர்ந்திருக்கிறார். அதாவது போர்டின் பக்கம் இவரது முதுகு இருக்கிறது. அதன் பிறகு கைகளில் சாக் பீஸை எடுத்துக்கொண்டு இரு படங்களை வரையத் தொடங்குகிறார்
Painting
PaintingNews Sense
Published on

திரும்பி நின்றுகொண்டு, இரு கைகளாலும் பார்க்காமலேயே வரைந்து அசத்தியுள்ளார் ஒரு ஓவியர். அவரது வீடியோ இப்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது

சாதாரணமாகவே ஓவியம் தீட்டுவது அத்தனை எளிதானது அல்ல. கை நடுங்கும். பலமுறை பிசகாகும். ஆனால் இங்கு ஒருவர், தனது இரு கைகளாலும் ஒரே சமயத்தில் இரு வேறு படங்களை வரைகிறார். அதுவும் பலகையைப் பார்க்கமலேயே.

பள்ளிக்கூட வகுப்பறையின் போர்டில் வரையும் இவர் கேமராவை பார்த்தபடி அமர்ந்திருக்கிறார். அதாவது போர்டின் பக்கம் இவரது முதுகு இருக்கிறது. அதன் பிறகு கைகளில் சாக் பீஸை எடுத்துக்கொண்டு இரு படங்களை வரையத் தொடங்குகிறார்.

அதன் பிறகு அந்த உருவத்தின் நுணுக்கங்களை வரையத் துவங்குகிறார். இவர் ஓவியத்தை வரைந்து முடிக்கும் நேரத்தில் சரியாக வீடியோவும் முடிவடைகிறது. இரண்டு ஓவியங்களையும் கச்சிதமாகவும் அழகாகவும் வரைந்து முடித்தார் இந்த ஓவியர்.

இந்த ஓவியரை பற்றிய தகவல்கள் எதுவும் தெரியவில்லை. இணையத்தில் பகிரப்பட்டதிலிருந்து இந்த காணொலிக்கு 1.5 மில்லியின் பார்வைகள் கிடைத்துள்ளன. வீடியோவை பார்த்த பலரும் இவரது திறமையைப் பாராட்டி வருகின்றனர்.

இந்த வீடியோவை Hinduism Now Global Press தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர, அதை நியூஸ் 18 தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது

இதற்கு முன்னர் ஒரு பெண் தத்ரூபமாக மசால் தோசையை வரைந்து டிவிட்டரில் பகிர்ந்திருந்தார். அவர் அதை தான் வரைந்தது என்று சொல்லாமல் இருந்திருந்தால் வித்தியாசம் கண்டுபிடித்திட முடியாத அளவிற்கு உண்மையான தோசை போலவே அது காட்சியளித்தது.

இதேபோல, ஒரே சமயத்தில் தன் கை கால்கள் அனைத்தையும் பயன்படுத்தி ஒரு ஓவியர் ஓவியம் வரைந்தது குறிப்பிடத்தக்கது.

Painting
ஓரே சமயத்தில் 6 ஓவியங்களை வரைந்த ஓவியர்- வியப்பில் நெட்டிசன்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com