ஓரே சமயத்தில் 6 ஓவியங்களை வரைந்த ஓவியர்- வியப்பில் நெட்டிசன்கள்

அமெடோ தனது இந்த முயற்சியை இரண்டு வீடியோக்களாக வெளியிட்டிருந்தார். கடந்த ஜனவரி மாதம் பதிவிட்ட முதல் வீடியோவில் தான் இவர் ஒரே சமயத்தில் நான்கு ஓவியங்களை வரைந்திருந்தார். அதில் பிரபல கால்பந்து வீரர்களான லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டினோ ரொனால்டோவின் படங்களை வரைந்திருந்தார்.
Painting
Painting Pexels
Published on

பள்ளி, கல்லூரிகளில் ரெக்கார்ட் நோட்டில் படங்கள் வரைய வேண்டும் என்றாலே நாம் தடுமாறுவோம். அதுவும் ஒவ்வொன்றாக வரைய. ஓவியம் வரையத் தெரிந்தவர்களுக்கோ, அல்லது ஓவியக் கலைஞர்களுக்கோ அது பிரச்னை இல்லை தான் என்றாலும், ஒரு சமயத்தில் ஒரு ஓவியம் வரையலாம். அல்லது இரண்டு வரையலாம்.

ஆனால் ஓரே சமயத்தில் ஆறு ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளார் லிபியா நாட்டைச் சேர்ந்த ஓவியர். அதுவும் தனது இரு கைகள், மற்றும் தனது கால்களையும் பயன்படுத்தி இந்த ஆறு ஓவியங்களையும் வரைந்துள்ளார் அவர். இந்த வீடியோ இன்டெர்நெட்டில் வைரலாகி வருகிறது.

மோனிகெரெட் அமெடோ என்ற அந்த ஓவியர் தான் இந்த சாதனைக்கு சொந்தக்காரர். முதலில் ஒரே சமயத்தில் நான்கு ஓவியங்கள் வரைந்து இணையத்தில் பகிர்ந்திருந்த அமெடோ, அந்த சாதனையை செய்துமுடித்தப் பின் அடுத்த முயற்சியில் ஓரே சமயத்தில் ஆறு ஓவியங்களை வரைய முடிவெடுத்துள்ளார்.


அமெடோ தனது இந்த முயற்சியை இரண்டு வீடியோக்களாக வெளியிட்டிருந்தார். கடந்த ஜனவரி மாத பதிவிட்ட முதல் வீடியோவில் தான் இவர் ஒரே சமயத்தில் நான்கு ஓவியங்களை வரைந்திருந்தார். அதில் பிரபல கால்பந்து வீரர்களான லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டினோ ரொனால்டோவின் படங்களை வரைந்திருந்தார்.

இந்த ஓவியங்களை வரைய அவருக்கு ஒரு நாள் முழுவதும் தேவைப்பட்டுள்ளது அதை 40 செகண்ட் வீடியோவாக அவர் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

நான்கு லட்ச பார்வைகளை கடந்த இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதன் பிறகு, இன்னும் சற்று சுவாரஸ்யத்தை கூட்ட ஒரே சமயத்தில் 6 ஓவியங்களை வரைந்துள்ளார் அவர்.

இதை சரிவர செய்து முடிக்க அவருக்கு 8 நாட்கள் தேவைப்பட்டதாக அவர் பகிர்ந்திருந்தார். இதுவும் கிட்ட தட்ட 40 வினாடிகள் மட்டுமே உள்ளது. இவரது முந்தய வீடியோவை பார்த்து பலரும் விடுத்த கோரிக்கைகளையும் ஏற்று அரபு நாட்டை சேர்ந்த ஒரு கதாபாத்திரத்தின் ஓவியத்தையும் வரைந்துள்ளார் அமெடோ.


அமெடோ ஒரு மருத்துவ மாணவர். 2018ல் இருந்து தான் ஓவியங்கள் மீது இவரது காதல் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது

Painting
மணமகளின் காலில் விழுந்து ஆசி பெற்ற மணமகனுக்கு குவியும் பாராட்டுகள் - வைரல் வீடியோ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com