4 மாதங்கள், ரூ.3,00,000 செலவு: காரை ஹெலிகாப்ட்டராக மாற்றிய நபர் - எங்கே?

காரை ஓட்டுபவர்களுக்கும், அதில் பயணிப்பவர்களுக்கும் காற்றில் பறப்பது போன்ற அனுபவத்தைக் கொடுக்கவேண்டும் என நினைத்து இதை செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
காரை ஹெலிகாப்டராக மாற்றிய நபர்
காரை ஹெலிகாப்டராக மாற்றிய நபர் ட்விட்டர்
Published on

தனது நானோ காரை தரையில் ஓடும் ஹெலிகாப்டராக மாற்றியுள்ளார் உத்திரபிரதேசத்தை சேர்ந்த சல்மான் என்ற நபர்.

இந்தியர்களின் கிரியேட்டிவிட்டியை மெச்சிக்கொள்ளாதவர்கள் இல்லை. அதனை மீண்டும் உரக்கச்சொல்லும் விதமாக தனது காரை ஹெலிகாப்ட்டராக மறுவடிவமைத்துள்ளார் அசாம்கர் பகுதியை சேர்ந்த நபர்.

ஆனால், இதில் ஒரே ஒரு வித்தியாசம்!

இது தரையில் ஓடும் ஹெலிகாப்ட்டர் தான். அதாவது ஹெலிகாப்ட்டரின் வடிவத்தில் இருக்கும் கார். இந்த புதிய வகை கார் அவரது கிராமத்தினர் மத்தியில், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

உத்திரபிரதேசம், அசாம்கர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சல்மான். கார்பென்டராக பணியாற்றி வருகிறார். இவரிடம் டாடா நானோ கார் ஒன்று இருந்தது.

ஹெலிகாப்ட்டர்களின் மீது கொண்ட காதல் காரணமாக தனது காரையே ஹெலிகாப்ட்டராக மாற்ற முடிவு செய்துள்ளார் சல்மான்.

கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் உழைத்து, 3 லட்சம் ரூபாய் செலவு செய்து காரை மறுவடிவமைத்துள்ளார்.

காரை ஓட்டுபவர்களுக்கும், அதில் பயணிப்பவர்களுக்கும் காற்றில் பறப்பது போன்ற அனுபவத்தைக் கொடுக்கவேண்டும் என நினைத்து இதை செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

காரை ஹெலிகாப்டராக மாற்றிய நபர்
பஜ்ஜி சுட்ட எண்ணெயில் 9 ஆண்டுகளாக காரை ஓட்டும் இளைஞர் - எங்கே?

“சாலையில் ஓடும் ஹெலிகாப்ட்டர் ஒன்றை நான் வடிவமைத்திருக்கிறேன்” என்றார் சல்மான்.

மேலும், தனது கிராமத்தையும், மாவட்டத்தையும் பிரபலமடைய செய்யவேண்டும் என்றே இந்த முயற்சியை அவர் மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

“அரசும், பெரு நிறுவனங்களும் எங்களை கவனித்து, எங்கள் கனவுகளை நிஜமாக்க உதவி செய்யவேண்டும் என்பதே எனது குறிக்கோள். தரை, ஆகாயம் மற்றும் நீரில் ஓடும் ஹெலிகாப்ட்டர் ஒன்றை நான் உருவாக்க வேண்டும் என்பது தான் எனது கனவு” என்றும் ஏஎன்ஐ இடம் கூறியிருந்தார் சல்மான்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை அடுத்து இணையவாசிகள் பலரும் சல்மானை பாராட்டி வருகின்றனர். மற்றொரு புறம் தங்களால் இதை நம்பமுடியவில்லை எனவும் தெரிவித்து வருகின்ரனர்.

காரை ஹெலிகாப்டராக மாற்றிய நபர்
20 வயதில் 25 லட்சம் வருமானம் : பண்ணை தொழிலில் பட்டைய கிளப்பும் கல்லூரி மாணவி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com