பஜ்ஜி சுட்ட எண்ணெயில் 9 ஆண்டுகளாக காரை ஓட்டும் இளைஞர் - எங்கே?

சமையல் எண்ணெயில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் போது, வீணாகும் கழிவுகளிலிருந்து கை கழுவும், வீட்டைச் சுத்தம் செய்யும் கிருமி நாசினியையும் தயாரிக்கிறார்.
Avinash Narayanaswamy
Avinash NarayanaswamyTwitter
Published on

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் அவினாஷ் நாராயணசாமி. இவர் தன்னுடைய காரை 9 ஆண்டுகளாக பலகாரம் செய்து மிச்சமிருந்த எண்ணெயில் ஓட்டி வருகிறாராம்.

ஆம் நீங்கள் படித்தது சரி தான். ஆனால் அது எப்படி சாத்தியம் என்று பல கேள்விகள் உங்கள் மனதிற்கு எழும்.

பஜ்ஜி சுட்ட எண்ணெய்

அவினாஷ், தன் காரை இயக்குவதற்காக ஹோட்டல்களில் பஜ்ஜி சுடுவதற்குப் பயன்படுத்திய எண்ணெயை குறைந்த விலைக்கு வாங்குவாராம். அதன்பின்னர் அந்த எண்ணெயைப் பல கட்டங்களில் சுத்திகரித்து எரிபொருளாக மாற்றுவாராம்.

Avinash Narayanaswamy
41 ஆயிரம் அடி, திடீரென தீர்ந்த எரிபொருள், திகைத்துப் போன விமானி - திக் திக் நிமிடங்கள்!
cooking oil
cooking oil

2013 முதல் காருக்கு சமையல் எண்ணெய்

2013 முதல் தன் காருக்கு இந்த எண்ணெயை தான் பயன்படுத்துவதாகத் தெரிவித்த அவினாஷ் இது குறித்துக் கூறுகையில்,

1 லிட்டர் எண்ணெயில் இருந்து 700 முதல் 800 மி.லி., வரை எரிபொருள் கிடைக்கிறது.

இதற்கான செலவும் லிட்டருக்கு, 60 முதல் 65 ரூபாய்தான்.

இதுவரை 1.20 லட்சம் கி.மீ., வரை இந்த எண்ணெயில் ஓட்டி உள்ளார்.

இதனால், காரின் இன்ஜினுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இதன் மூலம் அவினாஷ், 'இண்டியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Avinash Narayanaswamy
டெஸ்லா நிறுவனத்துக்கு டஃப் கொடுக்கும் இந்தியக் கணக்கு வாத்தியாரின் சோலார் கார்

மைலேஜ்

இந்த இயற்கை எரிபொருள் மூலம் லிட்டருக்கு 15 முதல் 17 கி.மீ., வரை, 'மைலேஜ்' கிடைக்கிறது.

இதை அனைத்து டீசல் வாகனங்களிலும் பயன்படுத்தலாம். மற்ற டீசல்களை விடப் புகையும் குறைவாகத் தான் உள்ளது.

இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத 'பயோ' எரிபொருள் என்ற சான்றிதழையும் பெற்றுள்ளது.

இது தவிர சமையல் எண்ணெயில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் போது, வீணாகும் கழிவுகளிலிருந்து கை கழுவும், வீட்டைச் சுத்தம் செய்யும் கிருமி நாசினியையும் தயாரிக்கிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com