ஒரு மாதமாக மரத்தின் மீது வாழ்ந்து வரும் நபர் - இது தான் காரணமா?

உத்தர பிரதேசத்தின் மவு என்ற கிராமத்தை சேர்ந்த ராம் பிரவேஷ் என்ற நபர் கடந்த ஒரு மாதமாக மரத்தின் மீது வாழ்ந்து வருகிறார். அவரது உறவினர்கள் உணவை கயிறு கட்டி அவருக்கு அனுப்பி வருகிறார்கள்
மரத்தின் மீது வாழ்ந்து வரும் நபர்
மரத்தின் மீது வாழ்ந்து வரும் நபர்டிவிட்டர்

மனைவி தன்னுடன் சண்டைபோட்டுக் கொண்டே இருப்பதால் மரத்தின் மீதேறி ஒரு மாதமாக அங்கு வாழ்ந்து வருகிறார் உத்திர பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர்.

கணவன் மனைவிக்குள் நடக்கும் சிறு சண்டைகள், புரிதலற்ற விவாதங்கள் காரணமாக பல வேடிக்கை சம்பவங்கள் நடைபெறுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

அந்த வகையில் உத்தர பிரதேசத்தின் மவு என்ற கிராமத்தை சேர்ந்த ராம் பிரவேஷ் என்ற நபர் தன் மனைவி தன்னுடன் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார் எனக் கூறி பனை மரத்தின் மேல் வாழ்ந்து வருகிறார். இவர் ஒரு மாத காலமாக அந்த மரத்தின் மீது தான் வாழ்ந்து வருகிறார்.

ராமின் தந்தை கூறுகையில், தனது மகன், மனைவியிடமிருந்து தப்பித்துக்கொள்ள வேறு வழி இல்லாமல் மரத்தின் மீதேறி வாழ்ந்து வருவதாக தெரிவித்தார். மேலும் ராமின் மனைவி, சண்டைகளின் போது தினமும் கணவரை அடிப்பதுமுண்டு.

இதனால், மரத்திற்கு சென்றுவிட்டார் ராம். அவரது உறவினர்கள் அவருக்கு தினமும் கயிறு கட்டி உணவுகளை வழங்குகிறார்கள்.

ஆனால் கிராமவாசிகள் ராம் இப்படி மரத்தின் மீது தங்கி வருவதால், அவர்களுக்கு இடையூறாக இருக்கிறது என குற்றம் சாட்டி வருகின்றனர். முக்கியமாக, கிராமத்தின் பெண்கள், குளிக்க பயன்படுத்தும் குளம் இவர் தங்கியிருக்கும் மரத்திற்கு மிக அருகில் இருப்பதால், பெண்கள் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வலுவாக வருகிறது. கிட்ட தட்ட 100 அடி உயரத்தில் இவர் இருப்பதால், அங்கிருந்து அவர் பார்வைக்கு கிராமத்தில் நடக்கும் விஷயங்கள் தெரியும் என்றும், இது மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதிக்கிறது என்றும் கூறுகின்றனர்.

ராமை சமாதானம் செய்து கீழே இறங்க வைக்க மக்கள் முயன்றபோது, அவர் கற்களைக் கொண்டு கிராம வாசிகளைத் தாக்கியுள்ளார். இதனால் காவல் துறையினரிடம் மக்கள் புகாரளித்துள்ளனர்.

ஆனால், கிராமத் தலைவர் தீபக், பிரச்னை உண்மையில் ராம் பிரவேஷுக்கும் அவரது தந்தைக்கும் தான் எனக் கூறியுள்ளது சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மரத்தின் மீது வாழ்ந்து வரும் நபர்
கணவனை கவனித்துக்கொள்ள புது காதலியை தேடும் மனைவி - என்ன காரணம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com