எலான் மஸ்க்கின் ட்வீட்டுக்கு உ.பி போலீஸின் Thug Reply - நெட்டிசன்கள் ரியாக்‌ஷன் என்ன?

ட்விட்டரின் தலைவராக இவர் பொறுப்பேற்றது முதல் பல விதமான சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். இப்போது எலான் மஸ்க் செய்த ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Elon Musk
Elon MuskTwitter
Published on

எலான் மஸ்க்கின் வேலை பற்றிய ட்விட்டுக்கு உத்தர பிரதேச போலீசார் அளித்த பதில் நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க், சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார்.

ஏற்கெனவே இவர் டெஸ்லா, போரிங் கம்பனி, ஸ்பேஸ் எக்ஸ், நியூரா லின்க், ஓபன் ஏஐ உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டரின் தலைவராக இவர் பொறுப்பேற்றது முதல் பல விதமான சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். இப்போது எலான் மஸ்க் செய்த ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் எலான் மஸ்க்கின் வேலை பற்றிய ட்விட்டர் பதிவு ஒன்றை பகிர்ந்து, புதிய பதிவை வெளியிட்டு உள்ளனர். எலான் மஸ்க் தனது ட்வீட்டில்,

நான் ட்விட்டர் பதிவு போட்டால், அது பணி கணக்கில் எடுத்து கொள்ளப்படுமா? என பதிவிட்டு உள்ளார்.

Elon Musk
எலான் மஸ்குக்கு 10 குழந்தைகள்: எத்தனை மனைவிகள்? - மஸ்க் குடும்பம் பற்றிய சுவாரசிய தகவல்கள்
Elon Musk
Elon MuskTwitter

இதனை டேக் செய்து உத்தர பிரதேச போலீசார், தங்கள் ட்விட்டர் பக்கத்தில் "ஒரு ட்விட்டர் பதிவு வழியே உங்களது பிரச்னைகளுக்கு தீர்வு கொடுத்தால், அது பணி கணக்கில் எடுத்து கொள்ளப்படுமா?" என பதிவிட்டு உள்ளனர். தொடர்ந்து, அதற்கு அவர்களே ஆமாம் எனவும் பதிலளித்துள்ளனர்.

இந்த ட்விட்டர் பதிவுக்கு பலரும் பலவித விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Elon Musk
Twitter : விமர்சித்த ஊழியர்கள் பணி நீக்கம்; மன்னிப்பு கேட்பது போல எலான் மஸ்க் மறைமுக கேலி!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com