Flipkart : வாட்சுக்கு பதில் வறட்டி அனுப்பிய ஆன்லைன் தளம்: ஆர்டர் செய்த பெண் அதிர்ச்சி

ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் பொருட்களுக்கு பதிலாக வேறு பொருட்களை அனுப்பும் வழக்கம் சமீப காலங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
woman orders watch from Flipkart, receives cow dung
woman orders watch from Flipkart, receives cow dungTwitter
Published on

மக்கள் மத்தியில் ஆன்லைன் ஷாப்பிங் மோகம் அதிகரித்து வருகிறது. இருந்த இடத்திலிருந்து நினைத்தவற்றை வாங்கி மக்கள் குவிக்கின்றனர்.

ஆனால் ஆர்டர் செய்யும் மக்களுக்கு ஆன்லைன் தளங்கள் அதிர்ச்சியளித்து வருகிறது.

ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் பொருட்களுக்கு பதிலாக வேறு பொருட்களை அனுப்பும் வழக்கம் சமீப காலங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஃப்ளிப்கார்ட்டில் வாட்ச் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் டெலிவரி ஆனதோ மாட்டு சாணம்!

உத்தர பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள கசெண்டா கிராமத்தைச் சேர்ந்த நீலம் யாதவ் என்பவர் கடந்த செப்டம்பர் 28ம் தேதி ப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் ஆபரில் 1,304 ரூபாய் மதிப்புள்ள ரிஸ்ட் வாட்சை டெலிவரியின் போது பணம் செலுத்தும் வகையில் ஆர்டர் செய்திருந்தார்.

woman orders watch from Flipkart, receives cow dung
Flipkart: ஆன்லைனில் மொபைலுக்கு பதிலாக சோப்பை டெலிவரி செய்த நிறுவனம்

ஆனால் டெலிவரி செய்யப்பட்ட பார்சலில் வாட்சுக்கு பதில் மாட்டு சாணத்தால் ஆன 4 வறட்டிகளே இருந்திருக்கிறது.

அதன் பிறகு ஆர்டரை டெலிவரி செய்தவரை அழைத்து உடனடியாக ரிட்டர்ன் செய்ததோடு கொடுத்த பணத்தையும் திரும்ப பெற்றிருக்கிறார்கள். தொடர்ந்து இ-காமர்ஸ் தளங்கள் மீது இவ்வாறான குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com