சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களிக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்க `மகளிர் இட ஒதுக்கீடு' மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
காங்கிரஸ் உட்பட பல எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு வரவேற்பு தெரிவித்தாலும், 2024 தேர்தலை கருத்தில் கொண்டுதான் பாஜக இதை செய்து வருகிறது என்று இன்னொரு புறம் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
டெல்லியில் பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் பா.ஜ.க மகளிர் அணி சார்பில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதில், பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து, பூக்கள் தூவி பெண் நிர்வாகிகள் வாழ்த்தும் நன்றியும் தெரிவித்தனர்.
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும் பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்ததுடன் பிரதமர் மோடி காலில் விழுந்தார் வானதி சீனிவாசன்.
உடனே ஒரு அடி பின்னால் சென்ற பிரதமர் மோடி, அதைத் தடுத்து, காலில் விழக்கூடாது என்பது போன்ற அறிவுரைக் கூறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பின்னர் மேடையில் மகளிர் அணி நிர்வாகிகள் சிலர் மோடி காலில் விழுந்த போது, மோடியும் பதிலுக்கு மகளிர் அணி நிர்வாகிகள் காலை தொட்டு வணங்கினார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust