மனிதர்களின் பல நூற்றாண்டுக் கனவான "தனியாக பறப்பது" சாத்தியமாகியிருக்கிறது.
அயர்ன்மேன் போல ஒரு சூட்டை மட்டும் போட்டுகொண்டால் போதும். எங்கு வேண்டுமானாலும் பறந்து செல்லலாம்.
ஒரு பார்கில் நடப்பது போல கட்டடங்களுக்கு மேலே தாவிச் செல்ல முடிகிறது. இந்த ஜெட் ஃப்லை தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் பல நிறுவனங்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
பேட்டரி, உலோகம், ஏ.ஐ, என பல காரணிகளில் ஆய்வுகளைச் செய்து வருகின்றனர்.
வருங்காலத்தில் இந்த தனிநபர் பறக்கும் தொழில்நுட்பம் எல்லாரையும் வந்தடையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் எவ்வளவு காலத்தில் என்பதை எளிதில் கூறிவிட முடியாது.
இப்போது இந்த தொழில்நுட்பம் இராணுவத்தில் பயன்படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இணையத்தில் பரவிவரும் வீடியோ நாம் ஏற்கெனவே எதிர்காலத்துக்கு வந்துவிட்டோமா? என சிந்திக்க வைக்கிறது.
இந்த வீடியோவில் வருவது இந்திய இராணுவம் ஜெட் எஞ்சின் கொண்ட சூட்களை சோதனை செய்யும் காட்சி என்று ட்விட்டர்வாசிகள் கூறி வருகின்றனர்.
வெகு நாட்களுக்கு முன்னர் இந்திய விண்வெளி பாதுகாப்பு செய்திகள் ட்விட்டர் கணக்கில் இந்திய இராணுவம் புதிதாக 48 ஜெட்பேக் சூட்களை வாங்குவதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்த சூட் நாம் தனியாக பறக்க உதவும். இதனை அணிந்துகொண்டால் முதுகிலும் இரண்டு கைகளிலும் சிறிய ஜெட் எஞ்சின்கள் இருக்கும்.
இவை சிறிய ரக ஜெட் எஞ்சின்கள் எனக் கூறப்படுகிறது. இவற்றின் மூலம் காற்றில் நம்மை கட்டுப்படுத்துக்கொண்டு பறக்க முடியும்.
ஸ்டண்ட் கலைஞர்கள், தீவிர விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் அவசரகால மீட்பு பணியாளர்கள் இந்த சூட்டைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இது விரைவில் மக்களின் வாழ்க்கையை மாற்றக் கூடிய தொழில்நுட்பமாக வளரும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust