

பாஜக தலைவரான நுபுர் ஷர்மா கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நபிகள் குறித்து அவதூறாகப் பேசினார் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு சவுதி, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் கடும் கண்டனத்தை எழுப்பின. இந்த விவகாரத்தை முன்னிட்டு நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாகக் கன்னையா லால் என்பவர் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
கன்னையா லால் அவரது கருத்துக்காகக் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையானார். அதன் பிறகு கௌஸ் முகம்மது, ரியாஸ் என்ற இரண்டு இளைஞர்கள் கன்னையா லாலின் தையல் கடையில் பட்டப்பகலில் அவரை கொலை செய்தனர்.
இந்த கொலையை குற்றவாளிகளே வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். அதில் இது ஒரு புனித காரியம் என அவர்கள் பேசியுள்ளனர். அத்துடன் பிரதமர் நரேந்திர மோடிக்கும் மிரட்டல் விடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
கொலையாளிகள் விரைவாக கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு, சமூகத்தின் பல தரப்பிலிருந்து கண்டனங்கள் வருகின்றன. தமிழகத்தின் முன்னணி பத்திரிக்கை நிறுவனமான விகடன் இது குறித்து டிஜிட்டல் தலையங்கத்தில் கண்டனங்களை பதிவு செய்திருக்கிறது.
தலையங்கத்தின் ஒரு பகுதி
மத அடிப்படைவாதத்தின் கொடுங்கரங்கள் ஆபத்தானவை. அவற்றின் நிழலில் எப்போதும் வன்முறையே வேரூன்றி விஷச்செடியாக வளர்ந்து நிற்கும். அதற்கு உரமிட்டு வளர்க்கும் அமைப்புகள், கட்சிகள் மிக ஆபத்தானவை. நாகரிக சமூகத்தில் அவற்றுக்கு இடமில்லை. 'தாலிபான் மனநிலைக்கு எதிராக இந்திய இஸ்லாமியர்கள் உறுதியாக நிற்க வேண்டும்' என்று ஆஜ்மீர் தர்கா தலைமை நிர்வாகி கூறியிருக்கிறார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust