பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகளில் ஒருவரான நுபுர் ஷர்மா (பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர்), இஸ்லாமிய மதத்தின் இறைத்தூதர் மொஹம்மத் நபிகளைக் குறித்து மோசமான மற்றும் தவறான கருத்துக்களைக் கூறினார்.
இது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கத்தார், குவைத், செளதி அரேபியா, இரான் போன்ற அரபு உலக நாடுகள் இக்கருத்துக்கு தங்களின் கடும் கண்டனத்தைத் தெரிவித்தன. அதோடு சில நாடுகள், இந்திய அரசு பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கூறின.
பல்வேறு நாடுகளின் அழுத்தத்தைத் தொடர்ந்து நுபுர் ஷர்மா பாரதிய ஜனதா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பல்வேறு வலைதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதை அரபு உலக நாடுகள் வரவேற்றுள்ளன.
நுபுர் ஷர்மாவும் தன் சமூக வலைதள பக்கத்தில் தன் கருத்தை எந்தவித நிபந்தனையுமின்றி திரும்பப் பெறுவதாகவும், தான் எந்த ஒரு மதத்தைச் சார்ந்தவர்களையும் காயப்படுத்தும் நோக்கில் பேசவில்லை என்றும் பதிவிட்டிருந்தார்.
சரி யார் இவர்?
லிங்க்ட் இன் சமூக வலைதளத்தின் படி அவர் டெல்லி பப்ளிக் ஸ்கூலில் பள்ளிப் படிப்படிப்பையும், இந்து கல்லூரியில் பி ஏ பொருளாதாரத்தில் ஹானர்ஸ் பட்டப்படிப்பையும், டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டப் பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பையும் நிறைவு செய்துள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் கல்லூரியில் சட்டத்தில் முதுகளை பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
2011-ல் வழக்குரைஞராக தன் வாழ்கையைத் தொடங்கினார். 2008ஆம் ஆண்டு சட்டப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது, டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் யூனியனின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார் என சில வலைதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது இருந்து தான் அவர், பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர்கள் பிரிவில் இணைந்து பணியாற்றத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
2009 - 10 காலத்தில் 'டீச் ஃபார் இந்தியா' என்கிற அமைப்பின் தூதராகப் பணியாற்றினார் என்கிறது அவரது லிங்க்ட் இன் பக்கம்.
பாஜகவில் இணைந்தவருக்கு, கடந்த 2015ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவாலை எதிர்த்து, டெல்லி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் தேர்தலில் தோற்றுப் போனார் நுபுர் ஷர்மா.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust