உத்தர பிரதேசத்தில் திருமணத்தில் பயன்படுத்திய குதிரை மிரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வட இந்திய திருமணங்களில் மணமகனை குதிரை மீது அமரவைத்து அழைத்து வருவது ஒரு சடங்காகவே கடைபிடிக்கப்படும். குதிரை மீது அமர்ந்து உறவினர்கள் புடை சூழ ஆட்டம் பாட்டத்தோடு வருவார் மாப்பிள்ளை.
இப்படிப்பட்ட கொண்டாட்டங்கள் பல சமயங்களில் ஆபத்தானதாக மாறியுள்ளது. காரணம், காதுகளை துளைக்கும் அளவிற்கு அதிக சத்தத்துடன் பாடல்களும் இசையும், பட்டாசுகளும் வெடிக்கப்படும். இது மனிதர்களுக்கே தொந்தரவாக இருக்கும் நேரத்தில், விலங்குகளின் நிலையை யோசித்துப்பாருங்கள்.
அந்த வகையில், இங்கு நடந்த திருமணத்திலும் ஒரு கலாட்டா நடந்துள்ளது. உத்தர பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்திலுள்ள மௌடாஹா என்ற இடத்தில் ஒரு திருமண நிகழ்வு நடந்துகொண்டிருந்தது.
வழக்கம்போல மணமகனை அழைத்து வரும் குதிரை அங்கு அலங்கரிக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. விழாவிற்கு வந்திருந்த DJ பாடல்களை பிளே செய்துகொண்டிருக்க, விருந்தினர்கள் உற்சாகத்தில் நடனமாடிக்கொண்டிருக்கின்றனர். திடீரென மிரண்ட குதிரை கூட்டத்திற்குள் இருந்தவர்களைத் தாக்க ஆரம்பித்தது. இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
இதன் வீடியோவை டைம்ஸ் நவ் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது. உள்ளூர் வாசிகளின் கூற்றுப்படி, உத்தரப் பிரதேசத்தில் திருமணத்தின் போது குதிரையையும் நடனமாட வைப்பார்களாம். குதிரையின் உரிமையாளர் அதை ஆட வைக்க முயன்றுகொண்டிருக்கும்போது தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குதிரை மிரண்டதில் கூட்டத்தில் இருந்தவர்களில் ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சில சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust