காதலியின் செல்ஃபோனை திருடிய காதலன் - மாட்டிக்கொண்டது எப்படி? | Video

இன்ஸ்டாகிராமில் தற்போது ஒரு வீடியோ பரவலாக பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், சாலையில் பெண் ஒருவர் தன் செல்ஃபோனில் பேசியபடி நடந்துசெல்கிறார்
cell phone snatching (rep)
cell phone snatching (rep)canva
Published on

அன்றாடம் சாலையில் நடந்து செல்பவர்களிடம் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவங்களை நாம் கேள்விப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். பணம், நகை, செல்ஃபோன் போன்ற பொருட்களை, நாம் சிறிதும் கவனிக்காத நேரத்தில் வாகனங்களில் வந்து பறித்துச் சென்றுவிடுகிறார்கள். பெருநகரங்களில் இவை அதிகரித்து ஒரு அச்சுறுத்தலாக மாறி வருகிறது.

எப்போதும், நம் மீதும் நம்மை சுற்றியுள்ளவர்கள் மீதும் ஒரு எச்சரிக்கை பார்வை அவசியமாகவே இருக்கிறது.

இன்ஸ்டாகிராமில் தற்போது ஒரு வீடியோ பரவலாக பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், சாலையில் பெண் ஒருவர் தன் செல்ஃபோனில் பேசியபடி நடந்துசெல்கிறார்.

அவரை பின்தொடர்ந்து வேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர், பெண்ணிடம் இருந்து கைப்பேசியைப் பறித்து செல்கிறார். கையிலிருந்த செல்ஃபோன் பறிக்கப்பட்டதை அடுத்து அந்த பெண் அலறல் சத்தம் போட, இருவர், திருடனைத் துரத்திச் சென்று பிடிக்கின்றனர். பிடித்து வரப்பட்ட இளைஞனை பார்த்ததும், அந்த பெண்ணின் முகத்தில் அதிர்ச்சி தெரிகிறது.

cell phone snatching (rep)
"ரகசியமானது காதல்" காதலியை பார்க்க புர்கா அணிந்து சென்ற காதலன் கைது - ஒரு கலாட்டா சம்பவம்

இதை கவனிக்கும் பொது மக்கள் கேள்வி எழுப்பவே, அந்த பெண், ஃபோனை திருடிய நபர் தனது காதலன் எனக் கூறுகிறார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், தங்களது நேரத்தை வீணாக்கியதற்காக அவர்களை கடிந்துகொண்டனர். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்களோ, அவர்கள் இருவரையும் சரமாரியாக கலாய்த்து வருகின்றனர்

அந்த இளைஞன் உண்மையில் தன் காதலியிடம் விளையாடத் தான் இப்படி செய்தாரா அல்லது நிஜமாகவே திருடி சென்றாரா என்பது தெரியவில்லை.

cell phone snatching (rep)
கரடி பொம்மைக்குள் ஒளிந்திருந்த திருடன் - மாட்டிக்கொண்டது எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com