VLC Player-க்கு தடை விதித்த இந்தியா - காரணம் என்ன?

இந்த தடை மூலம் VLC media player- யின் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கம் மற்றும் பதிவிறக்க பயன்படும் லிங்க் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யவும் இந்தியா முழுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
VLC player
VLC playerTwitter
Published on

நமது மொபைலில் அல்லது லாப்டாப்பில் திரைப்படம் பார்க்கப் பெரும்பாலானோர்களால் பயன்படுத்தப்படும் மீடியா ப்ளேயர் VLC Media Player.

சாதாரணமாக VLC Media Player என்பது அனைவர் மொபைலில் இருக்கும் ஒரு ஆப். ஆனால் இந்த மீடியா ப்ளேயர் தடை செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகிறது.

இந்திய அரசால் 2 மாதங்களுக்கு முன் VLC media player தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகலும் இந்திய அரசால் வெளியிடப்படவில்லை.

இதற்கு காரணம், ஏற்கனவே இதைப் பயன்படுத்தி வரும் பயனாளர்களுக்கு எந்த ஒரு தடையும் ஏற்படவில்லை என்பது தான். அதே போல இது ஏன் தடை செய்யப்பட்டது என்பதற்கு சரியான தகவலைத் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சரிவரத் தெரிவிக்கவில்லை.

VLC player
டிக்டாக் : கோடியில் பணம், சிறை - Tiktok ஆல் திணறும் அரபு உலகம் - என்ன நடக்கிறது அங்கே?

VideoLan எனப்படும் பாரிஸை சேர்ந்த நிறுவனத்தால் இந்த VLC Media player இயக்கப்படுகிறது. ஆனால் இந்த மீடியா ப்ளேயர் மூலம் சீனாவின் பின்புலத்தைக் கொண்டு இயங்கும் சுக்காடா என்ற ஹேக்கிங் குழு பயனாளர்களின் தகவல்களை சீன நாட்டிற்கு கொடுப்பதாகக் கூறி இந்த VLC Media player தடை செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இது அதிகாரப்பூர்வ தகவலாக ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த தடை மூலம் VLC media player- யின் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கம் மற்றும் பதிவிறக்க பயன்படும் லிங்க் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யவும் இந்தியா முழுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

VLC player
ஐஸ் கிரீம் விளம்பரத்தில் நடித்த பெண்ணை தடை செய்த இரான் அரசாங்கம்

VLC மீடியா பிளேயரை பதிவிறக்கம் செய்ய முயன்ற சில பயனாளர்கள் இதை தங்கள் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்ததால் இந்த விஷயம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சீனாவின் பல செயலிகளைத் தகவல் பாதுகாப்பிற்காக இந்திய அரசு இதற்கு முன் தடை செய்துள்ளது. உதாரணமாக டிக்டாக், பப்ஜி மற்றும் கேம் ஸ்கேனர் போன்ற பல செயலிகள் இதற்கு முன் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவையனைத்தும் சீனாவின் செயலிகள் ஆகும். VLC media player பாரிஸை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

VLC player
பப்ஜி : மீண்டும் தடை செய்யப்பட்ட APP - என்ன நடந்தது? | PUBG

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com