ஐஸ் கிரீம் விளம்பரத்தில் நடித்த பெண்ணை தடை செய்த இரான் அரசாங்கம்

கலாச்சாரம் மற்றும் இஸ்லாமிய வழிகாட்டுதல்களுக்கான அமைச்சகம் அனைத்து விளம்பர நிறுவனங்களுக்கும் இந்த பெண் விளம்பரங்களில் நடிக்க தடை செய்யப்பட்டதை கடிதம் மூலம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.
விளம்பரம்
விளம்பரம்Twitter

ஹிஜாப் மற்றும் பெண்களின் நெறிமுறைகள் தொடர்பான சட்டங்களை வலுப்படுத்தும் விதமாக ஐஸ்கிரீம் விளம்பரத்தில் நடித்த பெண்ணை நடிக்க தடை செய்திருக்கிறது ஈரான் அரசாங்கம்.

கலாச்சாரம் மற்றும் இஸ்லாமிய வழிகாட்டுதல்களுக்கான அமைச்சகம் அனைத்து விளம்பர நிறுவனங்களுக்கும் இந்த பெண் விளம்பரங்களில் நடிக்க தடை செய்யப்பட்டதை கடிதம் மூலம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

இவர் இனி எந்த விதமான விளம்பரங்களிலும் நடிக்க முடியாது என அமைச்சகம் கூறியிருக்கிறது.

விளம்பரத்தில் என்ன தவறு?

இந்த விளம்பரத்தில் அந்த பெண் ஹிஜாப்பை லூசாக அணிந்து ஐஸ்கிரீம் சாப்பிடும் காட்சி தீவிர இஸ்லாமியர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விளம்பரத்துக்கு எதிராக ஈரானிய மத குருக்கள் ஐஸ்கிரீம் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்க வலியுறுத்தியிருக்கின்றனர்.

இந்த விளம்பரம் "பொது ஒழுக்கத்துக்கு எதிராகவும்" "பெண்களின் மதிப்புகளை அவமதிப்பதாகவும்" இருக்கிறது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகளை "கருவிகளாக உபயோகப்படுத்துவதை" எதிர்க்கும் சட்டமும் ஈரானில் இருக்கிறது.

அந்த பெண் இதற்கு முன்னர் நடித்த ஐஸ்கிரீம் விளம்பரமும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்
ஈரான் : உச்சத்தில் வறுமை, பாலியல் தொழில் செய்யும் பெண்கள் - கண்ணீர் சிந்த வைக்கும் நிலைமை

தடையும் சட்டங்களும்

1979 இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டது முதல் ஹிஜாப் உள்ளிட்ட சட்டங்கள் ஈரானில் கட்டாயப்படுத்தப்பட்டன.

சமீப நாட்களில் சமூக வலைத்தளங்களிலும் சாலைகளிலும் பெண்கள் இணைந்து ஹிஜாப்புக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்
செளதி அரேபியா ஏமன் போர் வரலாறு : இப்போது அங்கு நடப்பது என்ன? - விரிவான தகவல்கள்

கலாச்சாரப் புரட்சியின் உச்ச கவுன்சில் தீர்ப்புகளின்படி, இந்த பெண் மீது தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலாச்சாரம் மற்றும் இஸ்லாமிய வழிகாட்டுதல் அமைச்சகத்தின் கடிதம் குறிப்பிட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

இந்த சட்டங்கள் எப்போதும் நடைமுறையில் இருந்தாலும் ஆட்சியிலிருக்கும் அதிகாரிகளின் பொருட்டு சில நேரங்களில் கறாராக கடைபிடிக்கப்படும்.

விளம்பரம்
ஈரான் நாடு குறித்த ஆச்சர்யமான இந்த 8 உண்மைகள் தெரியுமா?

பெண்களுக்கு எதிரான அரசு?

ஏற்கெனவே ஈரானில் ஹிஜாப் உள்ளிட்ட சட்டங்களை அந்நாட்டு அரசு நீக்க வேண்டும் என பெண்கள் போராடி வரும் நிலையில், அரசின் இந்த செயல் போராடும் பெண்களுக்கு பதிலளிப்பதை போல பார்க்கப்படுகிறது,

சில ஆண்டுகளாக பொது இடத்தில் ஹிஜாப்பை நீக்கியதற்காக பெண்களை கைது செய்யும் நடவடிக்கைகளை ஈரான் அரசு மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்
ஈரானில் மரண தண்டனை 25 % அதிகரிப்பு - காரணம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com