2,000 ரூபாய் நோட்டுகளை நேரடியாக வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டுமா? RBI புதிய விளக்கம்

ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில், தனிநபர்கள் 2000 ரூபாய் கரன்சியை மாற்றிக்கொள்ளலாம் அல்லது அதற்கு சமமான தொகையை அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கலாம்.
2,000 ரூபாய் நோட்டுகளை நேரடியாக வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டுமா? RBI புதிய விளக்கம்
2,000 ரூபாய் நோட்டுகளை நேரடியாக வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டுமா? RBI புதிய விளக்கம்Twitter
Published on

கடந்த மே மாதம் 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது.

2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றவோ அல்லது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யவோ முதலில் கேட்கப்பட்டது. கடைசி தேதி அக்டோபர் 7 வரை நீட்டிக்கப்பட்டது.

RBI
RBITwitter

2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கும் மாற்றுவதற்குமான காலக்கெடு சமீபத்தில் முடிவடைந்த பிறகும் 10,000 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் மக்களிடத்தில் புழக்கத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மக்கள் தங்களின் ரூ.2,000 கரன்சி நோட்டுகளை குறிப்பிட்ட ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு சென்று மாற்றலாம் அல்லது காப்பீடு செய்யப்பட்ட தபால் மூலம் தங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கலாம் என்று தெரிவித்தது.

அதே சமயம் ரிசர்வ் வங்கி மக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவும் TLR (டிரிபிள் லாக் ரெசிப்டக்கிள்) படிவத்தை வழங்குகிறது.

இது குறித்து ரிசர்வ் வங்கியின் இயக்குநர் ரோஹித் பி தாஸ் கூறுகையில், "வாடிக்கையாளர்கள் காப்பீடு செய்யப்பட்ட தபால் மூலம் 2,000 ரூபாய் நோட்டுகளை அனுப்புமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம்" என்றார்.

ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில், தனிநபர்கள் கரன்சியை மாற்றிக்கொள்ளலாம் அல்லது அதற்கு சமமான தொகையை அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கலாம்.

அகமதாபாத், பெங்களூர், பேலாப்பூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, குவாஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, பாட்னா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் வங்கி நோட்டுகளை டெபாசிட் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2,000 ரூபாய் நோட்டுகளை நேரடியாக வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டுமா? RBI புதிய விளக்கம்
2,000 ரூபாய் நோட்டுகள் நீக்கம் - இந்திய கரன்சி நோட்டுகளை அச்சடிக்க எவ்வளவு செலவாகும்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com